ATM கார்டு பயன் படுத்துகிறீர்களா? அப்ப 10 லட்சம் வரை இலவச காப்பீடு இருப்பது தெரியுமா?

ATM கார்டு பயன் படுத்துகிறீர்களா? அப்ப 10 லட்சம் வரை  இலவச காப்பீடு இருப்பது தெரியுமா?

வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்குப் பல்வேறு வசதிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாகக் கிரெடிட் கார்டில் நமக்குத் தெரியாத பல வசதிகள் உள்ளது அப்படிப்பட்ட ஒன்று இந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு.

ஏடிஎம் கார்டுகளோடு வழங்கப்படும் காப்பீட்டைப் பற்றிய தகவல் மிகவும் அரிதாகவே மக்களைச் சென்று சேருகின்றது. எனவே இந்தத் திட்டத்தில் காப்பீடு கோரி விண்ணப்பிக்கும் வழக்கமும் மிகவும் அரிதாகவே உள்ளது.

ஏடி எம் கார்டு உரிமையாளர்கள் வங்கிகள் வழங்கும் காப்பீடு பற்றி வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் அறிவதில்லை. சம்பந்தப்பட்ட வங்கிகளே அவர்களது வாடிக்கையாளர்களுக்குக் காப்பீடு பற்றிய நேரடித் தகவல்களைத் தருவதில்லை.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான வங்கிகள் இப்போது தங்களுடைய கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்குக் காப்பீடு வழங்குகின்றன. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், உங்களுடைய வங்கிக் கணக்கு செயலிழந்தால், உங்களுடைய காப்பீட்டை அந்தந்த வங்கிகள் திரும்பப் பெறலாம்.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி என ஏற்குறைய அனைத்து வங்கிகளும் தங்களிடம் செயல்பாட்டுக் கணக்குகள் வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், விபத்து மற்றும் மரணக் கவரேஜ்-ஐ வழங்கும் காப்பீடுகளை வழங்குகின்றன.

காப்பீட்டின் அளவு வாடிக்கையாளரின் வங்கியைப் பொறுத்து மாறுபடுகின்றது. பொதுவாக அனைத்து வங்கிகளும் 50,000 ரூபாய் முதல் 10 லட்சம் வரையிலான காப்பீட்டை வழங்குகின்றன.

ஏடிஎம் கார்டு பயன்படுத்தும் நபர் விபத்தில் சிக்கியவுடன், காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும். அப்பொழுது தான் காப்பீடு கோரும் விண்ணப்பத்தை அனுப்ப முடியும். விபத்தில் பாதிக்கப்பட்டவரைப் பற்றிய அனைத்து ஆவணங்களையும் மிகவும் கவனமுடன் அந்த நபரின் உறவினர் பராமரிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட நபர் ஒரு வேளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால், அவருடைய எல்லா மருத்துவப் பதிவுகளையும் நீங்கள் கையில் வைத்திருக்க வேண்டும்.

ஒரு வேளை துரதிருஷ்டவசமாக அந்த நபர் இறக்க நேர்ந்தால், இறந்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை, காவல் துறை அறிக்கை, இறப்புச் சான்றிதழ் மற்றும் இறந்த நபரின் தற்போதைய ஓட்டுநர் உரிமம் போன்ற சான்றுகளில் ஏதேனும் உங்களிடம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

இறந்த நபர் 60 நாட்கள் பரிவர்த்தனைகளுக்கு ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தியுள்ளார் என்பதைக் கட்டாயம் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டும்.

விபத்து மரணக் காப்பீடு, கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளைப் பொறுத்தவரை, ஒரு நபர் பயன்படுத்தும் கார்டின் வகையைப் பொறுத்து மாறுபடும். பொதுவாக இது ரூ.30,000 முதல் ரூ.10 லட்சம் வேறுபடும். இத்தகைய காப்பிடுகளை வங்கிகள் இலவசமாக வழங்குவதாகச் செபியில் பதிவுசெய்யப்பட்ட வரி மற்றும் முதலீட்டு நிபுணர் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com