தேனீ கம்பம் பகுதியில் ஊருக்குள் சாவகாசமாக உலவும் அரிக்கொம்பன் காட்டு யானை!

தேனீ கம்பம் பகுதியில் ஊருக்குள் சாவகாசமாக உலவும் அரிக்கொம்பன் காட்டு யானை!

தேனீ , கம்பம் ஊர் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பெரு மக்கள் தொகை கொண்ட கம்பம் பகுதியில் அரிக்கொம்பன் காட்டு யானை புகுந்ததை கண்டு கம்பம் பகுதி மக்கள் மிகுந்த அச்சம் கொண்டனர்.திடீரென விளை நிலங்களுக்குள் புகுந்த அரி கொம்பன் யானை இடம்பெறாமல் அங்கேயே இரவு முழுவதும் நின்று இருந்தது.

கம்பம் ஊர் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையை தமிழக கேரள மாநில வனத்துறையினர், காவல் துறையினர் வருவாய்த் துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் மூணாறு சின்னக்கல் பகுதியில் அட்டகாசம் செய்துவந்த அரி கொம்பன் யானையை கடந்த கடந்த மாதம் மயக்க ஊசி செலுத்தி 4 கும்கி யானையின் உதவியுடன் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் வன சரணாலயத்தில் கொண்டு வந்து விட்டனர். அங்கிருந்து தமிழக வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்த யானை ஹவேவிஸ் மேகமலை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களை அச்சுறுத்தி வந்தது.

இந்நிலையில் நேற்று இரவு குமுளி ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம் பெயர்ந்த யானை கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பகுதியில் உள்ள தனியார் தென்னந்தோப்பில் புகுந்து விவசாய பயிர்களை அழித்து அங்கேயே தஞ்சம் அடைந்து நின்றுள்ளது.

யானை கூடலூர் அருகே உள்ள கழுதை மேட்டில் தொடர்ந்து கண்காணித்து வந்தனர் . இன்று காலை நாலு மணி அளவில் யானை இடம் பெயர்ந்து கூடலூர் வழியாக கம்பம் பகுதியை வந்தடைந்தது.

தகவலினை அறிந்து விரைந்து வந்த தமிழக கேரளா வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் அப்போதைக்கு பொதுமக்களையும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களையும் செல்ல விடாமல் அங்கு பணியில் இருந்த பணியாளர்களை வெளியேற்றி யானையின் செயல்பாட்டினை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.போலீசார்

மற்றும் வனத்துறையினர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாடுவதற்கு தடை விதித்து தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com