உகாண்டாவின் லுபிரிரா பள்ளியில் ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதல்!
மேற்கு உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லையில் உள்ள போண்ட்வே பகுதியில் லுபிரிரா மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்குள் திடீரென நுழைந்த கூட்டணி ஜனநாயகப் படையைச் சேர்ந்த ஆயுத மேந்திய கிளர்ச்சியாளர்கள் பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். அங்கு தகுந்தலில் காயமடைந்த பலர் ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உகாண்டா காவல் துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தேடும் பணியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் , 25 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 8 பேர் படுகாயங்களுடன் மீட்கப் பட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள ப்வேரா மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து உகாண்டா போலீஸ் படையின் செய்தித் தொடர்பாளர் ஃப்ரெட் எனங்கா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், " பள்ளிக் கூடத்தில் ஒரு தங்குமிடம் எரிக்கப் பட்டது மற்றும் ஒரு உணவுக் கூடம் சூறையாடப் பட்டது. இங்கு இதுவரை 25 உடல்கள் பள்ளியில் இருந்து மீட்கப்பட்டு ப்வேரா மருத்துவ மனைக்கு மாற்றப் பட்டுள்ளன. உகாண்டா காவல் துறையும் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையும் சந்தேக நபர்களை தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

