நைஜர் நாட்டில் அதிபரைக் கைது செய்து ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்!

நைஜர் நாட்டில் அதிபரைக் கைது செய்து ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்!

நைஜர் நாட்டில் திடீரென அந்நாட்டு ராணுவம் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையில் இறங்கியுள்ளது. நாட்டின் அதிபரை கைது செய்து ஆட்சியைக் கைப்பற்றி விட்டதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. 

அரசாங்கத்திற்கு பதிலாக ஒரு நாட்டை ராணுவம் கட்டுப்படுத்துவது பல்வேறு சூழ்நிலைகளால் ஏற்படுகிறது. இதை வரலாற்று ரீதியாகப் பார்த்தால், ஒரு நாட்டின் ராணுவம், புரட்சி அல்லது கிளர்ச்சி மூலமாக அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டின் ஆட்சியைக் கட்டுப்படுத்துகிறது. இது ஒரு நிலையான அரசாங்கம் அமையும் வரை ராணுவம் தற்காலிக காலத்திற்கு நேரடி கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும். இது போன்ற நிகழ்வுகளில் நேரம் காலம் எதையும் நம்மால் கணிக்க முடியாது. மற்றும் ஒரு நாட்டின் அரசியல், சமூகம், பொருளாதார நிலைமைகளைப் பொறுத்து இது மாறுபடும். 

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் ராணுவத்தினர் திடீரென புரட்சி செய்து வருகின்றனர். அந்நாட்டு அதிபரை சிறை பிடித்துவிட்டதாக டி.வி.யில் அறிவித்ததால், பெருவாரியான மக்கள் தலைநகர் நியாமேவில் ஒன்று கூடினர். இவர்களை விரட்டி அடிப்பதற்காக ராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. நைஜர் நாடு பிரான்ஸிடமிருந்து 1960 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது முதல், அரசியல் வன்முறைகளால் பல பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. இதுவரை அங்கு நான்கு முறை ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் நடந்துள்ளது. 

2010 ஆம் ஆண்டில் கூட அப்போதைய அதிபர் மாமாடோவின் ஆட்சியை ராணுவம் தூக்கி எறிந்தது. 2021 ஆம் ஆண்டு முதல் முகமது பாசு அதிபராக இருந்து வரும் நிலையில், அந்நாட்டில் தீவிரவாதிகளின் ஆயுதக் கிளர்ச்சி அண்மை காலமாக நடந்துவருகிறது. அந்நாட்டு தலைநகரிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் ஐஎஸ் மற்றும் அல்கொய்தா ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் மோதி வருகின்றனர். 

இப்படி இருக்கும் நிலையில், நைஜர் நாட்டின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைக்கு ஆப்பிரிக்கா ஒன்றியம், ஐநா சபை போன்றவை கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com