நடிகை ஜெயப்பிரதாவுக்கு பிடி வாரண்ட்!

ஜெயப்பிரதா
ஜெயப்பிரதா
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on: 

உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு பாஜக சார்பில் நடிகை ஜெயப்பிரதா போட்டியிட்டார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. ஜெயப்பிரதாவை எதிர்த்து போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அசம்கான் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் அந்த தேர்தல் பிரசாரத்தின்போது ஜெயபிரதா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர்மீது அம்மாநிலத்தின்  2 காவல்  நிலையங்களில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை உத்தர பிரதேசத்தில் எம்.பி, மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இதற்கிடையே இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆனால் ஜெயப்பிரதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதனையடுத்து ஜெயபிரதாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

logo
Kalki Online
kalkionline.com