பிரபல நடிகர் சரத்பாபுவிற்கு செயற்கை சுவாசம்.

பிரபல நடிகர் சரத்பாபுவிற்கு செயற்கை சுவாசம்.
Published on

டந்த  50 வருடங்களாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சரத்குமார். தற்போது உடல்நலப் பாதிப்பால் செயற்கை சுவாசம் அளித்து சிகிச்சை பெற்று வருவது திரையுலகத்தை வருத்தம் கொள்ள வைத்துள்ளது.

   71 வயதான நடிகர் சரத்பாபு கவலைக்கிடமான நிலையில்  சிகிச்சை பெற்று வருகிறார். உடல் நலம் குன்றிய நிலையில் பெங்களூரில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலை மேலும் மோசமான நிலையில் கடந்த 20 ஆம் தேதி ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

      அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. சரத்பாபுவின் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் நுரையீரலும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மருத்துவர்கள் இன்னும் கூடுதல் நேரம் கடந்த பின்பு தான் முழுமையான தகவலை அளிக்க முடியும் என்று கூறியுள்ளனர்.

      சத்யபாபு தீட்சதலு என்ற இயற்பெயர் கொண்ட நடிகர் சரத்பாபு 1973 ஆம் ஆண்டு “ராமராஜ்யம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையில் அறிமுகமானார். 1977  ஆம் ஆண்டு இயக்குனர் கே. பாலச்சந்தரின் ’பட்டினப் பிரவேசம்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். அன்று  முதல் இன்றுவரை தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தியில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். திரையுலகில் கதாநாயகனாகத் துவங்கி வில்லன் குணச்சித்திரம் என அனைத்துவிதமான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

      சரத்பாபு தமிழில் ரஜினிகாந்த்துடன் நடித்த முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை மற்றும் முத்து கமலஹாசனுடன் சலங்கை ஒலி உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவையனைத்தும் வெற்றிப் படங்களாக அமைந்து அவருக்கு மிகப்பெரிய பெயர் பெற்றுத் தந்தது. இவரின் அமைதி தவழும் ஹீரோ முகம் முள்ளும் மலரும் வந்தபோது இவருக்கு ஏராளமான பெண் ரசிகைகளைத் தந்தது. இவர் அணியும் சதுரவடிவக் கண்ணாடியும் இவரால் அன்றைய காலத்தில் பிரபலமானது .

       நடிகர் சரத்பாபு நலம்பெற திரைத்துறையுடன் நாமும் பிரார்த்திப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com