அமெரிக்க கவர்னராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லர் தேர்வு செய்யப் பட்டுள்ளார். அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் லெப்டினன்ட் கவர்னர் பதவியை வகிக்கும் முதல் இந்திய அமெரிக்க பெண் என்ற பெருமையை அருணா மில்லர் பெற்றுள்ளார். 58 வயதான அருணா மில்லர் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கு 7 வயதாக இருக்கும் போது அருணாவின் குடும்பத்தினர் அமெரிக்கா குடிபெயெர்ந்துள்ளனர்.
ஜனநாயக கட்சி சார்பில் லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கு அருணா வேட்பாளராக நிறுத்தப்பட்ட நிலையில், வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். இதன் மூலம் மேரிலேண்டில் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டுப் பெண் என்ற பெருமையை அருணா பெற்றுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதுமட்டுமின்றி சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் கூகுள் சிஇஓ உள்பட உலகின் பல முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளில் இந்தியர்கள் தான் பதவியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.