அருணாச்சல பிரதேசம்: பொது சிவில் சட்டத்துக்கு பா.ஜ.க. கூட்டணியான தேசிய மக்கள் கட்சி எதிர்ப்பு!

அருணாச்சல பிரதேசம்: பொது சிவில் சட்டத்துக்கு பா.ஜ.க. கூட்டணியான தேசிய மக்கள் கட்சி எதிர்ப்பு!

டகிழக்கு மாநிலமான அருணாச்சலப்பிரதேசத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சியான தேசிய மக்கள் கட்சி, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மாநில பொதுச் செயலாளர் பகன்கா பாகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேசிய மக்கள் கட்சியின் செயல் தலைவர் லிகா சாயா செய்தியாளர்களிடம் கூறுகையில், பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியாக நாங்கள் இருந்தாலும் பிராந்திய கட்சியான எங்களுக்கு என்று தனி கொள்கைகள் உள்ளன. வளர்ச்சியின் அடிப்படையிலேயே நாங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவு அளித்து வருகிறோம்.

மாநிலத்தின் பன்முகத்தன்மை, கலாசாரம், அடையாளம் மற்றும் பல்வேறு இனத்தவர்கள் வாழும் சூழலில் பொது சிவில் சட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார் பாகே.

தேசிய மக்கள் கட்சி பொது சிவில் சட்டத்தை எதிர்ப்பது ஏன் என்று விரிவாக கூறிய அவர், அருணாச்சல பிரதேசத்துக்கு என தனித்துவமான சட்டங்கள் உள்ளன. சில திருத்தங்களுடன் கூடிய சட்ட நடைமுறைகளை நாங்கள் பின்பற்றி வருகிறோம். அதையே தொடர விரும்புகிறோம்.

தற்போதுள்ள சட்ட நிதிமுறைகளில் சில திருத்தங்கள் வேண்டுமானால் மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரலாம். அதுவும் பழங்குடியினருக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும். எக்காரணம் கொண்டும் பொது சிவில் சட்டத்தை ஏற்கமுடியாது என்று பாகே தெரிவித்தார்.

பொது சிவில் சட்டம் திருமணம், விவாகரத்து மற்றும் சொத்துரிமை ஆகியவை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் ஒரேமாதிரியானது. இதில் மதம், இனம் மற்றும் உள்ளூர் பழக்கவங்கள் என தனித்தனியாக பிரிக்க முடியாது என்று கூறுகிறது.

கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்டக்கமிஷன் பொது சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள், அங்கீகரிக்கப்பட்ட மத அமைப்புகளிடம் புதிதாக கருத்து கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய ஓய்வ்வூதிய திட்டத்தை திரும்ப பெற்றுக்கொண்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே தொடர வேண்டும் என்று வலியுறுத்தி கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் பாகே தெரிவித்தார். மாநில செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அடிப்படையாக இருக்கும் என்றும் கட்சியின் செயல் தலைவர் கூறியுள்ளார்.

தேசிய மக்கள் கட்சி மதச்சார்பற்ற கட்சியாகும். அதற்கு தனிப்பட்ட எந்த நபர் மீதும் அல்லது மத அமைப்புகள் மீதும் காழ்ப்புணர்ச்சி கிடையாது. அதன் ஒரு நோக்கம் மாநிலத்தின் வளர்ச்சியும் மக்களின் நலனும்தாந் என்று சாயா தெரிவித்தார். 60 உறுப்பினர்கள் கொண்ட அருணாசல சட்டப்பேரவையில் தேசிய மக்கள் கட்சிக்கு நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com