பிரதமர் மோடிக்கு வீழ்ச்சி தொடங்கிவிட்டது: அசோக் கெலோட்!

அசோக் கெலோட்
அசோக் கெலோட்

த்திய அரசு அமலாக்கத்துறை இயக்குநரகம், வருமானவரித்துறை மற்றும் சிபிஐ போன்ற அரசு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தி வருவதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலோட் குற்றஞ்சாட்டினார்.

இது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் மத்திய அரசு இந்த அமைப்புகளை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிரான அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் தலைவர்கள் எவராது நிதிமுறைகேடுகளில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் அதை வரவேற்பதாக குறிப்பிட்ட முதல்வர் அசோக் கெலோட்., பெரும்பாலும் அரசியல் எதிரிகளை பழிவாங்கவே இவற்றை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து இந்த நடவடிக்கை இருந்தாலும் அவர்கள் பா.ஜ.கவில் சேர்ந்துவிட்டால் அந்த குற்றச்சாட்டுகள் மாயமாகிவிடுகின்றன என்றும் கெலோட் குறிப்பிட்டார். பிரதமர் மோடிக்கு வீழ்ச்சி தொடங்கிவிட்டது. ஆனால், அவர் இன்னும் அதை அறியாமல் இருக்கிறார் என்றும் கெலோட் கூறினார்.

நாட்டில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் மதிக்கப்படுவதில்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) மூன்றும் மத்திய அரசின் கைப்பாவையாகச் செயல்படுகின்றன. அவை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராக அரசியல் ஆயுதம் போல் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த 9 ஆண்டுக்காலமாக இதுதான் நடந்து வருகிறது என்றார் அசோக் கெலோட்.

கடந்த வியாழக்கிழமை அமலாக்கத்துறை பிரிவினர் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் வீட்டில் அதிரடி சோதனை நடத்தியது, முதல்வரின் மகன் வைபவ் கெலோட் மீது அந்நியச் செலாவணி பராமரிப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தியதை அடுத்து முதல்வர் அசோக் கெலோட் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 25 ஆம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com