
ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி சண்டைகளால் , அந்த மாநில அரசியலில் பெருங் குழப்பம் நீடித்துவருகிறது. அசோக் கெலாட், சச்சின் பைலட் ஆதரவாளர்களிடையே ஏற்பட்டிருக்கும் மோதலை சரிக்கட்ட முடியாமல் தவித்துவருகிறது கட்சித் தலைமை.
இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே பனிப்போர் இருந்து வந்தது தான் , இந்த நிலையில் நேரு குடும்பத்தின் நீண்டகால விசுவாசியான அசோக் கெலாட், தலைமைக்கு எதிராகக் கிளம்ப தொடங்கியிருப்பது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்றமுறை காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக களத்தில் இறங்கி வேலை செய்தது சச்சின் பைலட் அணி, ஆனால் அசோக் கெலோட்டை ராஜஸ்தான் முதல்வராக்கியது கட்சி தலைமை.
சச்சின் பைலட்டை துணை முதல்வராக்கியது இதன் காரணமாக அடிக்கடி பைலட், அசோக் கேலாட்டிற்கு பிரச்சனைகள் கொடுத்துவந்தார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்கனவே பனிப்போர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அது தீவிரமாக முற்ற தொடங்கியிருப்பது தலைமைக்கு தலைவலியே.
`ராகுல்காந்தி தான் கட்சியின் தலைவராக வேண்டும்' என்று தொடர்ந்து சொல்லி வந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை, ஒரு வழியாகப் பேசிச் சரி செய்து காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்குத் தயார்ப்படுத்தியது கட்சி தலைமை. அதனால் கெலாட்டின் அரசியல் எதிரியான சச்சின் பைலட்டுக்கு ராஜஸ்தான் முதல்வர் பதவியை வழங்கவும் திட்டமிட்டிருந்தது.
இது பிடிக்காத கெலாட் அவரை காண வந்த கட்சி மேலிட தலைவர்களை தவிர்த்ததால் மல்லிகார்ஜுன கார்கேவும், அஜய் மாகேனும் ஏமாற்றத்துடன் டெல்லிக்கே திரும்பிச் சென்றனர்.
தற்போது கெலோட் தலைமையில் உள்ள 108 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில், சுமார் 90 எம்.எல்.ஏக்கள் தன் பக்கம் இருப்பதால்தான், இந்த விஷயத்தில் தைரியமாகத் தலைமையை எதிர்த்து நிற்கிறார் கெலாட்'' என்கின்றனர் ராஜஸ்தான் காங்கிரசார்.
தற்போது இந்த உட்கட்சி சண்டைகள் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு பெரும் தலைவலியை உண்டு பண்ணியிருக்கிறது.