கவுகாத்தி பல்கலைகழகம் மாதவிடாய் விடுமுறைக்கு அனுமதி!

கவுகாத்தி பல்கலைகழகம்
கவுகாத்தி பல்கலைகழகம்

சாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பல்கலைக்கழகம், மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கியுள்ளது.

பெண்கள் மாதம் மாதம் மாதவிடாய் காலங்களில் உடலளவில் மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதனால் அவர்கள் மாதம் மாதம் விடுமுறை கேட்க பெண்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதற்கு பல அலுவலகங்கள், கல்லூரிகளில் தாமாகவே முன்வந்து மாதவிடாய் விடுமுறை அளித்து வருகின்றது.

இதன் தொடர்ச்சியாக கவுகாத்தி பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், குறைந்தபட்ச வருகைப்பதிவில், மாதவிடாய் விடுப்புக்கென்று 2 விழுக்காடு தளர்வு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதவிடாய் காலத்தில் இனி மாணவிகள் விடுப்பு எடுக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உத்தரவிட்டதையடுத்து, இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அனைத்து மாணவர்களும் செமஸ்டர் தேர்வெழுத 75 சதவிகிதம் வருகை பதிவேடு அவசியமாக இருந்த நிலையில் தற்போது மாணவிகளுக்கு, குறைந்தபட்ச வருகை பதிவு 73 விழுக்காடு போதுமானதாகும். தேஜ்பூர் பல்கலைக்கழகத்தை தொடர்ந்து, கவுகாத்தி பல்கலைக்கழகம் மாதவிடாய் விடுமுறையை கொண்டுவந்துள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு மாணவிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com