பூமியை கடந்துச் சென்ற சிறுகோள்… ஆனால் மீண்டும் வரும் என்று நாசா எச்சரிக்கை!

2024 on Asteroid
2024 on Asteroid
Published on

பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்களில் ஒரு பெரிய சிறுகோள் பூமியை நேற்று கடந்துச் சென்றது. இது தனது பாதையில் சற்று விலகியிருந்தால் கூட பூமிக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்திருந்தனர்.

பூமிக்கு அருகில் ஏராளமான சிறுகோள்கள் உள்ளன. அந்தவகையில்அமெரிக்காவின் கலிபோர்னியாவின் பசடேனாவில் உள்ள நாசாவின் ஜெட் புராபல்ஷன் ஆய்வகம் (ஜே.பி.எல்.) மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கிகளை பயன்படுத்தி ‘2024-ஆன்’ என்ற சிறுகோளை முதன்முதலில் கண்டறிந்துள்ளது. இதனையடுத்து இதுபற்றிய முழு விவரங்களும் வெளியிடப்பட்டன. அதாவது அளவு, நகர்வு, கடிவம் ஆகியவை குறித்து ஆராயப்பட்டது.

இந்த சிறுகோள்  720 அடி விட்டம் கொண்டது. 60 மாடி கட்டிடத்தின் உயரம் கொண்டிருப்பதுடன், இதன் வேகம் மணிக்கு சுமார் 25 ஆயிரம் மைல்கள் (சுமார் 48 ஆயிரம் கிலோ மீட்டர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.  சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம் மைல் தொலைவில் பூமியைக் கடந்து செல்லும். பூமிக்கும், நிலவுக்கும் இடையில் உள்ள தொலைவைவிட 2.6 மடங்கு தூரமாகும்.

இந்த சிறுகோள் பூமியை கடக்கும்போது அதன் பாதையில் சிறிதளவு மாற்றம் ஏற்பட்டாலும் பூமிக்கு பேராபத்து என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினர். இந்தநிலையில் நேற்று இந்த கோள் எந்த ஆபத்துமின்றி பூமியை கடந்தது.

இதையும் படியுங்கள்:
ராகுல் காந்தி நாக்கை அறுத்தால் 11 லட்சம் தருவதாக கூறிய சிவசேனா எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!
2024 on Asteroid

இதுகுறித்து டெல்லி விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் பேசினார். அதாவது, ”விண்வெளியில் ‘2024 ஆன்’ சிறுகோள் பூமியை கடந்து சென்றது. இது 720 அடி பெரியது. அதாவது 2 கிரிக்கெட் மைதானத்தின் அளவு போன்றது. இந்த சிறுகோள் திட்டமிட்டப்படி நேற்று பகல் 3.49 மணிக்கு பூமிக்கும், நிலவிற்கும் நடுவில் பூமியில் இருந்து 10 லட்சத்து 44 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் கடந்து சென்றது. குறிப்பாக, பூமியுடன் ஒப்பிடும்போது வினாடிக்கு 8.88 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. அடுத்து இதே சிறுகோள் வருகிற 2035-ம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி  மீண்டும் பூமியை கடந்து செல்ல இருப்பதாக முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுள்ளது.” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com