

சத்தீஸ்கரின் பலோடா பஜார் மாவட்டத்தில் உள்ள ஒரு எஃகு ஆலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பில் குறைந்தது ஏழு தொழிலாளர்கள் கருகி இறந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட தகவல்களின்படி, இந்த விபத்தில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பலத்த தீக்காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆலையில் உள்ள உருக்காலை (Furnace) பிரிவில் திரவ உலோகம் கையாளப்படும்போது அல்லது பாய்லர் வெடித்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெடிப்பின் தாக்கம் மிக அதிகமாக இருந்ததால், ஆலை கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது.