அந்த காலத்தில் தமிழ்நாடு என்று இருக்கவில்லை! வரலாற்று பண்பாட்டு சூழலில் தமிழகம்!முடிவுக்கு வந்த தமிழ்நாடு சர்ச்சை: டெல்லிக்கு கிளம்பிய ஆளுநர்!

அந்த காலத்தில் தமிழ்நாடு என்று இருக்கவில்லை! வரலாற்று பண்பாட்டு சூழலில் தமிழகம்!முடிவுக்கு வந்த தமிழ்நாடு சர்ச்சை: டெல்லிக்கு கிளம்பிய ஆளுநர்!

ஒரு வழியாக தமிழ்நாடு vs தமிழகம் சர்ச்சை முடிவுக்கு வந்திருக்கிறது. இன்று காலை ஆளுநர் மாளிகை, தமிழ்நாடு என்று தலைப்பிட்டு வெளியாகியிருக்கும் செய்திக் குறிப்பில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து வந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஆளுநரின் செய்திக்குறிப்பில், 'காசி மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையே உள்ள தொடர்பைக் குறிக்க தமிழகம் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். அந்த காலத்தில் தமிழ்நாடு என்பது இருக்கவில்லை. எனவே, வரலாற்று பண்பாட்டுச் சூழலில் தமிழகம் என்பதை மிகவும் பொருத்தமான வெளிப்பாடு என்ற கண்ணோட்டத்துடன் குறிப்பிட்டேன்'

'எனது கண்ணோட்டத்தை தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை போல பொருள் கொள்வதோ அல்லது அனுமானம் செய்வதோ தவறானது மற்றும் யதார்த்தத்துக்கு புறம்பானது'

'எனது பேச்சின் அடிப்படை புரியாமல் ஆளுநர் தமிழ்நாட்டின் பெயரை மாற்றுவதற்கான பரிந்துரை எனும் வாதங்கள் விவாதப் பொருளாக மாறியுள்ளன. அர்தற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த விளக்கம் என்று அதில் தெரிவித்திருக்கிறார்'

கடந்து பத்து நாட்களாகவே ஆளுநர் பேச்சு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து இருந்து வருகிறது. சட்டமன்றத்தில் ஆளுநர் பேச வந்தபோது இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஆளுநருக்கு எதிராக கோஷங்கள் எழுந்தன. ஆளுநர் உரைக்கு எதிரான தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஆளுநரே சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டினார்கள். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த தி.மு.க குழு, ஆளுநர் பேச்சு பற்றி விளக்கமளித்தது. அதைத் தொடர்ந்து குடியரசுத்தலைவர்கள் அவர்களது புகாரை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைத்ததாக செய்திகளும் வெளியாகின.

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் புகார் மனு அனுப்பப்பட்டதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்குமான மோதல் அதிகரித்து வந்த நிலையில் இன்று 2 நாள் பயணமாக ஆளுநர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சரை சந்திக்கும் திட்டமிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையிலிருந்து விளக்க அறிக்கை வெளியாகியிருப்பது சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்தாலும், அடுத்து டெல்லியில் நடக்கப்போவது பற்றிய எதிர்பார்ப்புகளையும் ஆரம்பித்து வைத்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com