அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டம் என்பது வருமான வரி செலுத்தாத 18 முதல் 40 வயதுக்குட்பட்ட சேமிப்புக் கணக்குதாரர்களுக்கான ஒரு சேமிப்பு திட்டமாகும். இது அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களின் ஓய்வூதியத்திற்காக பணத்தை சேமிக்க ஊக்குவிக்கிறது..இத்திட்டத்தில் இணையும் சந்தாதாரர்கள் 60 வயதை பூர்த்து செய்ததும் பல்வேறு பலன்களைப் பெற முடியும். இந்தத் தொகை, சந்தாதாரர் 60 வயதினை பூர்த்தி செயத பிறகு அவர்களுக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். சந்தாதாரர் மறைந்த பிறகு, அவரது வாழ்க்கைத்துணை அதே ஓய்வூதியத் தொகையினை வாழ்நாள் முழுவதும் பெறுவார்கள்
வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் இந்தத் திட்டத்தில் சேரலாம். சந்தாதாரர்கள் மாதம் ₹1,000, ₹2,000, ₹3,000, ₹4,000 அல்லது ₹5,000 என ஏதேனும் ஒரு தொகையைத் தேர்வு செய்யலாம். 60 வயதை அடைந்த பிறகு, சந்தாதாரருக்கு மாதந்தோறும் உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படும். சந்தாதாரர் இறந்த பிறகு, அவரது மனைவிக்கு ஓய்வூதியம் தொடரும். இருவரும் இறந்த பிறகு, சந்தாதாரர் 60 வயதை எட்டியபோது சேகரிக்கப்பட்ட முழுத் தொகை நியமனங்களுக்கு வழங்கப்படும்.
இந்தத் திட்டம் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு அவர்களின் நீண்ட ஆயுட்கால அபாயங்களை நிவர்த்தி செய்யவும், ஓய்வூதியத்திற்காக தானாக முன்வந்து சேமிக்கவும் ஊக்குவிக்கிறது. இது தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கட்டமைப்பின் கீழ் செயல்படுகிறது. : இந்தத் திட்டம் மே 9, 2015 அன்று தொடங்கப்பட்டது.
மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா (APY) திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ₹5,000 வரை வங்கி கணக்கில் சந்தாதாரர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. தற்போது இந்தத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இத் திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்களின் ஓய்வூதிய கால பாதுகாப்பை உறுதி செய்கிறது. இத்திட்டம், மேலும் விரிவாக்கப்பட்டு வருகிறது.
சந்தாதாரரும் அவரது துணை ஆகிய இருவரும் மறைந்தால், சந்தாதாரர் 60 வயதாகும் வரை திரட்டப்பட்ட மொத்த ஓய்வூதியத் தொகை, நாமினிக்கு வழங்கப்படும். அடல் பென்ஷன் யோஜனா திட்டத்திற்கான பங்களிப்புகள், தேசிய ஓய்வூதிய அமைப்பு (NPS) போன்றே, வருமான வரிச் சட்டம் 80CCD(1)-ன் கீழ் வரிச் சலுகைகளைப் பெறத் தகுதியுடையது. அடல் பென்ஷன் யோஜனா (APY) - பென்சன் சந்தாதாரர் 60 வயதுக்கு முன்பே காலமானால், அவரது துணை அடல் பென்ஷன் யோஜனா கணக்கில் தொடர்ந்து பங்களிக்க விரும்பினால், அதைத் தொடரலாம். இந்த கணக்கு மீதமுள்ள காலத்திற்கு துணையின் பெயரில் பராமரிக்கப்படும். சந்தாதாரர் 60 வயது அடைந்திருந்தால், அவரது மறைவுக்குப் பிறகு துணைக்கு அதே ஓய்வூதியத் தொகை வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். மாற்றாக, திட்டத்தை நிறுத்திவிட்டு, துணை திட்டப் பலன்களைப் பெறவும் முடியும். அடல் பென்ஷன் யோஜனா திட்ட சந்தாதாரர்கள், தாமதமான அல்லது செலுத்தப்படாத பங்களிப்புகளுக்கு வட்டியினை செலுத்த வேண்டும். இந்த கட்டணங்கள் PFRDA ஆல் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும்.
அடல் பென்ஷன் யோஜனா தொடர்பாகப் புகார் ஏதேனும் இருந்தால் அதை அளிக்க விரும்புவோர், www.npscra.nsdl.co.in என்ற இணையதளத்தை அணுகலாம்.இதை எந்த நேரத்திலும், எங்கு இருந்தும் இலவசமாக அணுக முடியும். இணையதள முகப்புப் பக்கத்தில், 'NPS-Lite அல்லது CGMS சந்தாதாரர்' என்பதைத் தேர்ந்தெடுத்து, புகாரைப் பதிவு செய்ய வேண்டும். புகார் பதிவு செய்யப்பட்டதும் புகார் அளித்தவருக்கு ஒரு டோக்கன் எண் ஒன்று வழங்கப்படும். 'ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புகார் / விசாரணையின் நிலையைச் சரிபார்க்கவும்' என்ற விருப்பத்தின் கீழ், சந்தாதாரர் தனது புகாரின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ள முடியும். இதைப் பற்றிய விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் இப்போது தேவைப்படுகிறது.