அடேங்கப்பா!!! இந்த நாட்டு மக்கள் வரியே செலுத்த வேண்டாமாம்… இலவசம்.

அடேங்கப்பா!!! இந்த நாட்டு மக்கள் வரியே செலுத்த வேண்டாமாம்… இலவசம்.
Published on

க்ரைன் போர் நடந்த போதும் சரி, கொரோனா பெருந்தொற்று காலங்களிலும் சரி, ஆசியாவில் இருக்கும் இந்த சிறிய நாட்டின் பொருளாதாரம் துளிகூட பாதிக்கவில்லை. உலக அளவில் எல்லா நாடுகளும் கடனில் தத்தளித்து வரும் நிலையில், இந்த நாடு மட்டும் அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று உலக பொருளாதாரத்தையே நடுங்க வைத்து விட்டது எனலாம். பல நாடுகளின் செலவுகளையும் அதிகரித்தது. இதனால் பல நாடுகள் போதிய பட்ஜெட் இல்லாமல் தத்தளித்தன, தற்போது நிலவும் விலைவாசி உயர்வும் இந்த நோய்த்தொற்றின் தாக்கம்தான். 

ஆனால் இந்த சிறிய நாடு மட்டும் இது போன்ற எல்லா விதமான சவால்களையும் நல்ல முறையில் கையாண்டு, எவ்வித பிரச்சனைகளும் இல்லாமல் இருக்கிறது. பல நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது, இந்நாட்டில் வெறும் 1.9% சதவீதம் மட்டுமே கடன் உள்ளது. உலகிலேயே இதுதான் குறைந்த கடன் தொகையாகும். 

இதற்கு காரணம் இந்த நாட்டில் உள்ள எண்ணெய் வளம். இதை பெட்ரோ நாடு என்பார்கள். கிட்டத்தட்ட 90 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியில், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி தான் மேலோங்கி இருக்கிறது. 

குடிமக்கள் யாரும் இந்நாட்டில் வருமான வரி எதுவும் செலுத்துவதில்லை. கல்வி மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் அனைத்தும் இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நாட்டுக்கு செல்லும் பலரும் இது மிகவும் பாதுகாப்பான, அமைதியான, சுத்தமான நாடு என்று கூறுகிறார்கள். 

மேலும் இந்த நாட்டின் மன்னராக இருக்கும் சுல்தான் ஹசனல் வோல்கியா, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். மக்களுக்கு ஏதேனும் தேவை என்றால் உடனடியாக செய்து கொடுக்கும் மனம் படைத்தவர். வெறும் 5 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட இந்த நாடு கடன் இல்லாமல் இருப்பதற்கு பெட்ரோலிய பொருட்கள் விற்பனை செய்வது மூலம் கிடைக்கும் பணமே காரணமாகும். 

மேலும், இந்நாட்டின் பொருளாதாரத்தின் சிறப்பு என்னவென்றால், சிறிய அளவு கடனை செலுத்த வேண்டும் என்றாலும், வெளிநாட்டு நாணயத்துக்கு நிகராக அதை செலுத்த வேண்டாம். உள்நாட்டு நாணய மதிப்பிலேயே எந்த கடனாக இருந்தாலும் செலுத்தலாம்.

ஆனால், 90% இவர்கள் பெட்ரோலிய பொருட்களின் விற்பனையையே நம்பி இருப்பதால், எதிர்காலத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனென்றால் உலக நாடுகள் முழுவதுமே கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. இதனால் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு எதிர்காலத்தில் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. 

இதன் காரணமாக, இந்த நாடு தன்னுடைய ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் எரிபொருள் சார்ந்தே வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது என வர்த்தக நிபுணர்கள் கூறுகிறார்கள். 

இந்த நாடு எந்த நாடு? ஆசியாவில் இருக்கும் புரூனே நாடுதான்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com