மனைவியை பிளாக் மெயில் செய்ய முயற்சி: சட்டப் பேரவையில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தகவல்!

மனைவியை பிளாக் மெயில் செய்ய முயற்சி: சட்டப் பேரவையில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தகவல்!
Published on

பெண் ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தன் மனைவியிடம் லஞ்சம் கொடுக்கவும், பிளாக்மெயில் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக சட்டப்பேரவையில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன் தினம் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கான பின்னணியை அறிய வேண்டுமென்றால் நாம் சற்று முன்னோக்கிக் போக வேண்டும்.

மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா பட்னாவிஸ், மும்பை மலபார் ஹில் போலீஸ் நிலையத்தில் கடந்தமாதம் பிப்ரவரி 20-ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில் அனிக் ஷா என்ற பெண் தனக்கு லஞ்சம் கொடுக்கவும், பிளாக்மெயில் செய்யவும் முயன்றார் என கூறப்பட்டுள்ளது.

இதன் பேரில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானது. இதன் விவரங்களை தெரிவிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் அஜித் பவார் கோரிக்கை விடுத்தார்.

பிளாக்மெயில் விவகாரம்…

2015 – 2016 ஆன் ஆண்டு வாக்கில் இந்த அனிக்ஷா, அம்ருதாவுக்கு அறிமுகமானார். அறிமுகமான காலகட்டத்தில் அவர் தான் வடிவமைத்த ஆடைகளை அணியும்படி என் மனைவியிடம் கூறியுள்ளார். சில நாட்கள் நன்கு பழகியபின் தனது தந்தை அனில் ஜெய்சிங்கானி மீது 15 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து அவர் விடுபட உதவும்படியும் அனிக் ஷா அம்ருதாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மனு அளித்தால், அதை தன் கணவரிடம் கொடுப்பதாக அம்ருதா கூறியுள்ளார்.

ஆனால், நடந்தது வேறு. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வரான பின், அனிக்ஷா, துணை முதல்வர் மனைவியுடன் தனக்கு இருந்த நட்பு மற்றும் இருவருக்குமான உரையாடல்கள் மற்றும் தகவல் தொடர்புகளை சில மோசடிக் கும்பல்களிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்கியதுடன், தன் தந்தையை விடுவிக்கக் கோரி அம்ருதாவை பிளாக் மெயில் செய்துள்ளார். இதனால் அம்ருதா, அனிக்ஷாவின் அலைபேசி எண்ணை பிளாக் செய்துள்ளார். ஆனால், அதன் பின்னரும் வேறு வேறு எண்களில் இருந்து அம்ருதாவுக்கு பிளாக் மெயில் அழைப்புகளும், வீடியோக்களும் வரத் தொடங்கி இருக்கின்றன.

அதில் துணை முதல்வர் வீட்டுப் பணிப்பெண்ணிடம் பை நிறைய ரூபாய் நோட்டுகளுடன் 1 கோடி ரூபாய் அனிக்ஷா அளிப்பதைப் போன்ற வீடியோவும் இருந்திருக்கிறது. ஆனால், அது தன் வீட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பை அல்ல என ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகி விட்டதாக தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்திருந்தார்.

அம்ருதா அளித்த புகாரின் அடிப்படையில், சதி மற்றும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அனிக் ஷா மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து அம்ருதா தந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனிக்ஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com