ஜப்பான் பிரதமரைக் கொல்ல முயற்சி; குண்டு வீச்சு!

ஜப்பான் பிரதமரைக் கொல்ல முயற்சி; குண்டு வீச்சு!

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றாக ஜப்பான் நாட்டின் பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவி வகித்து வருகிறார். சென்ற 2020ம் ஆண்டு ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டுக்கு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஃபுமியோ கிஷிடா வெற்றி பெற்று ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவி ஏற்றார். அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஷின்சோ அபேவை முன்னாள் கடற்படை வீரர் ஒருவர் திடீரென சுட்டுக் கொன்றார்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்தக் கொலைச் சம்பவம். அதேபோல், தற்போது ஜப்பானில் மீண்டும் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது ஒரு கொலை முயற்சி சம்பவம். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பங்கேற்ற ஒரு பொதுக்கூட்டம் ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள வகயமா பகுதியில் நடைபெற்றது. அந்தப் பொதுக்கூட்டத்தில் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு மர்ம நபர் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவை நோக்கி பைப் வெடி குண்டை வீசினார்.

குண்டு வெடித்ததும் பொதுக்கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பொதுக்கூட்டப் பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழ்ந்தது. இந்த வெடிகுண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தில் இருந்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அதிர்ஷ்டவசமாக காயம் ஏதுமின்றி உயிர் தப்பினார். வெடிகுண்டு வீச்சுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் பிரதமரை உடனடியாக பத்திரமாக அழைத்துச் சென்றனர். பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் பயத்தில் அலறி அடித்துக்கொண்டு அங்குமிங்கும் கலைந்து ஓடினர். அதைத் தொடர்ந்து பிரதரைக் கொல்லும் முயற்சியாக குண்டு வீசிய அந்த நபரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு நாட்டின் பிரதமரை குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்த இந்த சம்பவம் உலகம் முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com