டாய்லெட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் கவனத்திற்கு.

டாய்லெட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் கவனத்திற்கு.

ற்போதெல்லாம் ஸ்மார்ட் போன் நம்முடைய உடலின் ஒரு பாகம் போலவே ஆகிவிட்டது. அந்த அளவுக்கு இந்த சாதனத்தை நம் அன்றாட வாழ்விலிருந்து பிரிக்க முடியவில்லை. சிலர் கழிவறையில் கூட செல்போனுடன் நுழைய ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் 10 நிமிடங்களுக்கு மேல் அங்கே செல்போன் பயன்படுத்தினால் என்ன ஆகும் தெரியுமா? 

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இல்லை என்றால், நம்மை ஒரு மாதிரி பார்ப்பார்கள். அந்த அளவுக்கு மக்களோடு செல்போன்கள் பின்னிப் பிணைந்துவிட்டன. சிலர் தூங்கும் நேரத்தைத் தவிர, எல்லா நேரத்திலும் கையில் பசை போட்டு ஒட்டியது போலவே ஸ்மார்ட் போனை வைத்திருப்பார்கள். இது பல வகையில் உதவியாக இருந்தாலும், அதனால் ஏற்படும் பக்க விளைவுகளிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். 

உங்களுடைய ஸ்மார்ட் போனை நீங்கள் இறுதியாக எப்போது துடைத்து சுத்தம் செய்தீர்கள்? இந்த செயல் மிகவும் அரிதாகவே நடக்கும். சிலருடைய ஸ்மார்ட்போனின் பேக் கேஸைக் கழற்றி பார்த்தால், ஊரிலுள்ள ஒட்டு மொத்தக் குப்பையும் அங்குதான் நிறைந்திருக்கும். இதை நீங்கள் சுத்தம் செய்யாமல் இருக்கும்பட்சத்தில், உங்களுக்கே தெரியாமல் பல உடல் நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது. அதிலும் குறிப்பாக டாய்லெட்டில் பத்து நிமிடங்களுக்கு மேல் செல்போன் பயன்படுத்தினால், திடீர் தலைவலி, தூக்கமின்மை போன்ற கோளாறுகள் ஏற்படும் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

சமீபத்தில் NordVPN நடத்திய ஆய்வில், பொதுவாக 10 பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறார்கள் என்றால் அதில் 6 பேர் டாய்லெட்டுக்கு செல்போனுடன் சொல்லும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். அதிலும் இளைஞர்கள் மத்தியில் இந்த பழக்கம் அதிகமாக இருக்கிறதாம். இவர்களில் 60% பேர் டாய்லெட்டில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். 30% பேர் செய்திகளை படிப்பதற்கும், மீதமுள்ள 10% பேர் நெருங்கிய நபர்களுக்கு எஸ்எம்எஸ், கால் செய்வதில் நேரத்தை செலவழிக்கிறார்கள் எனத் தெரியவந்துள்ளது. 

இது ஸ்மார்ட்போன் அடிமைத்தனமாக இருந்தாலும், இதைத் தாண்டி பல்வேறு உடல்நலக் கோளாறுகளை மறைமுகமாக ஏற்படுத்துவதற்கு காரணமாக இருப்பதையும் கவனிக்க வேண்டும். ஏனென்றால், டாய்லெட் என்பது கிருமிகள், பாக்டீரியாக்கள் போன்ற கெட்ட விஷயங்கள் அதிகம் இருக்கும் இடமாகும். இவை எளிதில் ஸ்பான் ஃபோனின் பேக் கவர், மைக், டிஸ்ப்ளே, ஸ்பீக்கர் போன்ற இடங்களில் பரவிவிடும் அபாயம் இருக்கிறது. 

இந்த செல்போனை கண் காது மூக்கு வாய் என கிருமிகள் எளிதில் நுழையக்கூடிய இடங்களில் வைக்கும்போது, அதன் பாதிப்பு நேரடியாக இருக்கும். சொல்லப்போனால், செல்போனில் ஒட்டிக்கொள்ளும் கிருமிகள் 28 நாட்கள் வரை வீரியம் கொண்டதாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

இதனால், சுவாசக் கோளாறு, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, சிறுநீரகத் தொற்று, தோல் நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த கிருமியின் தாக்கத்தால் இரவு நேரங்களில் தலைவலி மற்றும் தூக்கமின்மை வரலாம் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. எனவே ஸ்மார்ட்போனை டாய்லெட்டில் பயன்படுத்துவதை உடனே நிறுத்திக் கொள்ளுங்கள். 

இன்னொருமுறை டாய்லெட்டுக்கு ஸ்மார்ட் ஃபோனைக் கொண்டு செல்லும்போது, இந்தப் பதிவு உங்களுக்கு ஞாபகம் வர வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com