குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடைபெற்ற உலகக்கோப்பை ஒருநாள் சர்வதேச போட்டியின் இறுதியாட்டம் நடைபெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் திருப்புமுனையாக ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இந்திய அணி தோல்வி அடைந்தபோதிலும், ஆஸ்திரேலியா 6-வது முறையாக கோப்பை வென்றதை பலரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
ஆனாலும், வெற்றியாளர்களுக்கு பிரதமர் மோடி அளித்த மதிப்புமிக்க கோப்பை மீது ஆஸ்திரேலிய வீர்ர் மிட்சல் மார்ஷ் தனது இரு கால்களையும் வைத்து போஸ் கொடுத்தது கிரிக்கெட் ரசிகர்களின் மனதை புண்படுத்தியது. குறிப்பாக இந்தியர்களுக்கு. இதனால், மிட்சல் மார்ஷ் செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
உலக கோப்பையை வெல்ல தகுதியான அணிதான் ஆஸ்திரேலியா. ஆனால், மிட்சல் மார்ஷின் செயல் மோசமானது என பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மருத்துவர் அபிஹிஜித் சாஹாஜி காண்ட்கர் ஒரு விநோதமான கருத்தை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். ஆஸ்திரேலிய வீர்ரின் செயலை வேறுபடுத்தி பார்க்க வேண்டியதில்லை என்கிறார் அவர்.
அவர் கூறும் விளக்கம் இதுதான்:
மரியாதை என்பது இந்திய கருத்தில் உடல் உறுப்புகளுடன் தொடர்புடையது. இது இந்து நம்பிக்கை மற்றும சாதிய கட்டமைப்பில் இருந்து உருவாகிறது.
உடல் உறுப்பு ஏன் தாழ்வாக கருதப்படுகிறது?
கைகள் சுபமானதாகவும், கால்கள் அசுபமாகவும் ஏன் கருதப்படுவது ஏன்? பொதுவாக சாதிய அமைப்பு முறை கொண்ட இந்தியாவில், பிராமணர்கள் வாயிலிருந்தும், க்ஷத்ரியர்கள் தோள்களிலிருந்தும், வைசியர் தொடைகளிலிருந்தும், சூத்திரன் படைப்பாளியின் பாதங்களிலிருந்தும் பிறந்தனர் என ரிக் வேத்த்தின் புருஷ்சூக்தம் சொல்கிறது.
எனவே ஒரு சூத்திரன் பிறந்த இடமான பாதங்களை தாழ்வாக கருதுக்கும்போது இந்திய சமூகத்தில் உள்ளது. உடலின் படிநிலைக்கு சமமாகத்தானே சாதியின் படிநிலை உள்ளது.
கோவிலுக்கு வெளியே நாம் காலணிகளை வெளியே விட்டுவிட்டுச் செல்கிறோம். அதேபோல மங்களகரமான காரியங்களைச் செய்யும்போதும் காலணிகளை அணிவதில்லை. இது செளகரியத்துக்காகவா? இல்லை மரியாதை நிமித்தம்.
உங்கள் கால்கள் தாழ்வானதாகவும், தூய்மையற்றதாகவும் கருதப்படுவதால் நீங்கள் செருப்புகளை அகற்றுகிறீர்கள். அதேபோல ஒருவரை நமஸ்கரிக்கும்போது அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கும்போது அவர்களுடன் ஒப்பிடுகையில் உங்களை தாழ்ந்தவர்களாக கருதுகிறீர்கள். நீங்கள் இதை மதிக்கிறீர்கள், ஏற்றுக்கொள்கிறீர்கள்.
உடல் உறுப்புகள் மற்றும் உடைகள், காலணிகள் ஆகியவை இந்து சாதிய நம்பிக்கைகளுடன் சிக்கலான முறையில் இணைக்கப்பட்டுள்ளன.தூய்மையானது மற்றும் தூய்மையற்றவைக்கு ஆழமான அடிக்கருத்துகள் இந்தியாவில் உள்ளன.
உலகின் வேறு எந்தப் பகுதியிலும் இந்த அளவுக்கு நடப்பதில்லை. ஆனால், ஆஸ்திரேலியர்களுக்கு கைகளும் ஒன்றுதான். கால்களும் ஒன்றுதான். ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று அவர்கள் நினைப்பதில்லை. மேலும அவர்கள் கோப்பை மீது கால்களை வைத்தது சாதாரணமா செயல்தான்.
இந்திய கலாசாரம் என்பது பெரும்பாலான இந்துக்களால் கண்மூடித்தனமாக பின்பற்றப்படுவது. ஏன் எப்படி? என்று சிந்திக்காமலே நாம் அதை பின்பற்றி வருகிறோம்.
இந்தியர்கள் மிட்சல் மார்ஷ் உலக கோப்பை மீது கால் வைத்திருக்கும் படத்தைப் பார்த்து கிளர்ந்து எழுவதற்கு என்ன காரணம் என்றால், அவர்கள் மனதில் அப்பாவித்தனமாக வேரூன்றியிருக்கும் சாதிய கருத்துக்கள்தான்.
நீங்கள் சாதிவெறி கொண்டவராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், நீங்கள் எவருடைய காலையாவது மிதித்துவிட்டால் உடனடியாக தொட்டு வணங்குகிறீர்கள். மன்னிக்கவும் எனது உடலின் தாழ்வான பகுதி (சூத்திர்ரகள் பிறந்த இடம்) உங்கள் மீது பட்டுவிட்டது என்றா சொல்வீர்கள்.? அந்த நோக்கத்தில் நீங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இது வேரூன்றியுள்ளது. இந்தியாவில் சாதியபடிநிலை என்பது ஒவ்வொன்றிலும் சாதீயம் தலையிடுகிறது.
ஆனால், ஆஸ்திரேலியர்கள் கடுமையாக உழைத்து கோப்பையை வென்றிருக்கிறார்கள். சாதனை படைத்தவர்கள் எப்படி வேண்டுமானாலும் மகிழ்ச்சியை கொண்டாடலாம். அடுத்த முறை உங்கள் கால்களை எதையாவது தொட்டுவிட்டால் நீங்களும் அதை கொண்டாடலாமே.
உடலில் உள்ள அனைத்து உறுப்பும் ஒன்றுதான். ஒன்று உயர்ந்த்து, மற்றொன்று தாழ்ந்த்து என்பது அல்ல. ஒரு மருத்துவர் என்கிற முறையில் நான் இதைக் கூறுகிறேன். அறிவியலும் எனது கருத்துடன் உடன்படும் என அவர் பதிவிட்டுள்ளார்.