அயோத்தி திரைப்படம் OTT தளத்தில் வெளியாவது சர்ச்சையால் தள்ளிப்போனதா?

அயோத்தி திரைப்படம் OTT தளத்தில் வெளியாவது சர்ச்சையால் தள்ளிப்போனதா?

இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிகர் சசிகுமார் அயோத்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு முதல் திரைப்படம் ஆகும்.இந்தத் திரைப்படம் கடந்த மார்ச் மூன்றாம் தேதி திரையரங்குகளில் வெளிவந்தது. பாசிட்டிவ் விமர்சனங்களை வாரிக்குவித்து ஹிட் அடித்த அயோத்தி திரைப்படம் ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்து பெரும் பாராட்டுக்களைக் குவித்த திரைப்படம் ‘அயோத்தி’. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் R. மந்திர மூர்த்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ,நடிகர் சசிகுமார், ப்ரீத்தி அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா மற்றும் புகழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலக திரைப்பட தகவல் தளமான ஐஎம்டிபி இணையதளத்தில் 8.5 மதிப்பீடு வழங்கப்பட்டு விமர்சனரீதியாக பாராட்டுகளை அள்ளியது.

இயக்குநர் மந்திரமூர்த்தி உணர்வுப் பூர்வமாகப் படத்தை உருவாக்கி இருந்தார். திரைப்படத்தில் தேர்ந்த நடிகர்கள். சிறந்த இசை, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் மிக சிறப்பாக உருவாக்கப் பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளி வந்த அயோத்தி திரைப்படம் அனைத்து தரப்பினராலும் வரவேற்கப் பட்டு வருகிறது. அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமார் காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார்.

திரைப்படத்தை மார்ச் 31 ஜி5 OTT தளத்தில் வெளியாவதாக இருந்தது. அதனால் கடைசி நிமிடத்தில் OTT தளத்தில் வெளியாவது தள்ளிப்போட பட்டதாக தெரிகிறது. ஒடிடியில் தள்ளி போக காரணம் அயோத்தி படத்தின் கதை என்னுடையது என வேறு ஒருவர் சொந்தம் கொண்டாடுவதால், ஜி5 யிலிருந்து தள்ளிப்போவதாகவும் கூறப்படுகிறது.

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் நடித்த அயோத்தி படத்தை முன்வைத்து புதிய சர்ச்சை வெடித்தது. இப்படத்தின் கதை யாருடை யது என்பதில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்மற்றும் மாதவராஜ் இடையே சமூக வலைதளங்களில் மோதல் வெடித்தது.

தற்போதும் திரையரங்குகளில் ரசிகர்கள் வந்து பார்த்து மகிழ்கிறார்கள் என்பதால் இந்த திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் ஏழாம் தேதி ஓடி டி யில் வெளியிடலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். மதங்களைத் தாண்டிய மனிதநேயத்தைப் போற்றும் படம் எனக் கொண்டாடப்பட்ட ‘அயோத்தி’ திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com