70 வயது மேல் மருத்துவ செலவை அரசே ஏற்கும் - இந்த திட்டத்தில் இணைவது எப்படி ?

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ayushman bharat health insurance
ayushman bharat health insurance
Published on

மகளிர், பெண் குழந்தைகள், முதியோர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் 70 வயத்திற்கு மேற்பட்ட முதியோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் புதிய நலத்திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.

அந்த வகையில் ஒரு வீட்டில் 70 வயதிற்கு மேற்ப்பட்ட முதியோர் இருந்தால் அவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அவர்களுக்கு தேவையான மருத்துவ செலவுகளை மத்திய அரசே இலவசமாக வழங்கும் வகையில் புதிய திட்டம் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஜன் சுரக்ஷா யோஜனா (pradhan mantri jan suraksha yojana) என்ற காப்பீட்டு திட்டத்தில் கீழ் நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கான இலவச மருத்துவக் காப்பீடு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தில் கீழ் ஒரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக இன்சூரன்ஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விரிவுப்படுத்தப்பட்டு, தற்போது, இந்த திட்டத்தின் கீழ், 70 வயதிற்கு மேல் உள்ள மூத்த குடிமக்களும் பயன்பெற உள்ளனர்.

2017-ல் ‘நேஷனல் ஹெல்த் பாலிசி’(national health Policy) இதை அறிமுகப்படுத்தினார்கள். இந்நிலையில் தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலமாக ஏழை, பணக்காரர் என்ற எந்த பாகுபாடும் இன்றி 70 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. தற்போது இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள 6 கோடி முதியேர்கள் பயன் அடைய உள்ளனர்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் சேர விருப்பம் உள்ளவர்கள் https://abdm.gov.in/ (national health authority) என்ற இணையதளத்திற்கு சென்று அங்கு கேட்கப்பட்டுள்ள விவரங்களையும், ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின்னர் மூத்த குடிமக்களுக்கான தனி மருத்துவக் காப்பீடு அட்டையை ஆன்லைனிலேயே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இந்த கார்டை பயன்படுத்தி 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இலவசமாக மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல்: அனைவருக்கும் சுகாதார அடையாள அட்டை திட்டம் தொடக்கம்!
ayushman bharat health insurance

இந்த திட்டத்தின் கீழ், தற்போது 12,696 தனியார் மருத்துவமனைகள் இணைந்துள்ளன. இதில் எந்த மருத்துவமனையில் வேண்டுமானாலும், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com