இனி தனியார் கல்வியியல் கல்லூரிகளிலும் பி.எட் சேர்க்கை! மாணவர்கள் மகிழ்ச்சி!

Admission of B.Ed students
Admission of B.Ed students

தனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட்., மாணவர் சேர்க்கை நடத்த, தமிழக கல்வியியல் பல்கலைகழகம் அனுமதி அளித்துள்ளது.

இந்த ஆண்டின் கவுன்சிலிங்கிற்காக tngasaedu.in என்ற இணையதளத்தில் , 25ம் தேதி விண்ணப்ப பதிவு துவங்கியது. அக்., 3ம் தேதி வரை பதிவு செய்ய அவகாசம் உள்ளது. அக்., 6ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்., 12ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்தப்படும் என கல்வியியல் கல்லூரி இயக்குனரகம் அறிவித்து இருந்தது.

B.Ed Admission
B.Ed Admission

ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., சேர்க்கைக்கு தமிழக அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

தற்போது 650க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கையை துவங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அரசு கவுன்சிலிங் முடிந்த, 15 நாட்களுக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என்று, நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அதிக எண்ணிக்கையிலான சேர்க்கைகள் நடைபெறுவதால், அது மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com