'பாட்ஷா' பட தயாரிப்பாளர் வீ. தமிழழகன் காலமானார் - நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான இரங்கல்..!

வீ. தமிழழகன்
வீ. தமிழழகன்
Published on

தமிழ் திரையுலகின் பொற்காலமாக கருதப்படும் 80-களில், பிரம்மாண்டமான வெற்றி படங்களை கொடுத்த முன்னணி தயாரிப்பாளர் வீ. தமிழழகன் சென்னையில் காலமானார். மறைந்த முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான ஆர்.எம். வீரப்பனின் மகனான இவர், தியாகராய நகரில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த தமிழழகன், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காவியங்களான 'பாட்ஷா', 'பணக்காரன்', 'மூன்று முகம்', 'காக்கிச்சட்டை' உள்ளிட்ட மெகா ஹிட் திரைப்படங்களை தயாரித்தவர். தயாரிப்பாளராக மட்டுமின்றி, 'நிலா பெண்ணே' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ஒரு இயக்குநராகவும் தனது முத்திரையை பதித்தவர்.

குறிப்பாக, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'பணக்காரன்' படத்தில் இடம்பெற்ற 'மரத்த வெச்சவன் தண்ணி ஊத்துவான்' என்ற பாடலில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றி ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார்.

தமிழழகனின் மறைவு செய்தி கேட்ட நடிகர் ரஜினிகாந்த் மிகுந்த மனவேதனையடைந்து தனது எக்ஸ் (X) தளத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:

மதிப்பிற்குரிய அமரர் ஆர்.எம். வீரப்பன் அவர்களின் புதல்வர், எனது அன்புத் தம்பி தமிழழகன் அருமையான மனிதர். அவரது திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்."

திரையுலகினர் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இவரது மறைவுக்குத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
ரூ.1 லட்சம் முதலீட்டுக்கு ரூ.44,995 வட்டி! அசத்தும் போஸ்ட் ஆபீஸ் TD திட்டம் - முழு விபரம் உள்ளே!
வீ. தமிழழகன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com