மீண்டும் பாபா ! வரவேற்பினை பெறுமா?

Rajini - suresh krishna
Rajini - suresh krishna
Published on

மீண்டும் புதுப்பொலிவுடன் புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது பாபா திரைப்படம். 2002ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் பாபா. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் அவரே படத்தை தயாரித்தும் இருந்தார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். 2002 ஆம் வருடம் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இத்திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, நம்பியார், கருணாஸ் என பலர் நடித்திருந்தார்கள்.

இத்திரைப்படத்திற்கு ஏ .ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். மகா அவதாரமான பாபாஜியை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்போது பெரிய வரவேற்பினை பெறவில்லை. இத்திரைப்படத்தில் இடம் பெற்ற பாபா முத்திரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் வசீகரித்தது. இது தற்போது புதிய திரையிடலுக்கு தயாராகி உள்ளது பாபா திரைப்படம்.

baba
baba

நவீன தொழில் நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாடல்கள் அனைத்தும் ரீமிக்ஸ் செய்யப்பட்டு டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளது. படத்தில் டால்பி மிக்ஸ் ஒலி அமைப்புக்கு மாற்றப்பட்டிருப்பதால் மீண்டும் ஒரு புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு தர இருக்கின்றது. விரைவில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது.

தற்போதைய சூப்பர் ஸ்டாரின் அரசியல் நிலைப்பாடு மற்றும் மார்க்கெட் நிலவரம் என பலதும் பல்வேறு மாற்றம் பெற்றுள்ள நிலையில் தற்போதைய ரிலீஸ் நிலவரம் குறித்து மறு வெளியீடுக்கு பிறகு தெரியவரும்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com