

2025-ஆம் வருஷம்... இந்த வருஷத்தை "தங்கத்தின் ஆண்டு"னு சொன்னா தப்பே இல்லை. நம்ம வாழ்நாள்ல பார்த்திராத அளவுக்கு தங்கம் விலை ஏறி, ஒரு சவரன் நகை வாங்குறது ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிடுச்சு. "அடேங்கப்பா!"னு சொல்றதுக்குள்ள, அடுத்த கட்டத்துக்கு விலை ஏறிடுது.
கல்யாணம் பண்ண வேண்டிய வீட்ல இருந்து, சும்மா சேமிப்புக்காக வாங்க நினைக்கிற நடுத்தர மக்கள் வரைக்கும் எல்லாரும் குழப்பத்துல இருக்காங்க. இன்னும் ரெண்டே மாசத்துல 2026-ஆம் வருஷம் பொறக்கப் போகுது. அப்பவாவது விலை குறையுமா, இல்லை இப்படியே ராக்கெட் வேகத்துல போயிட்டே இருக்குமான்னு பலரும் மண்டையைப் பிய்ச்சிக்கிட்டு இருக்காங்க.
இந்தச் சூழல்லதான், உலகப் புகழ்பெற்ற தீர்க்கதரிசி பாபா வாங்காவின் 2026-ஆம் ஆண்டுக்கான ஒரு கணிப்பு, உலகச் சந்தையையே ஒரு உலுக்கு உலுக்கியிருக்கு.
2026 பற்றி பாபா வாங்கா சொன்னது என்ன?
அவங்க கணிப்புப்படி, 2026-ல் உலகம் ஒரு பயங்கரமான, மிகப் பெரிய நிதி நெருக்கடியைச் (Global Financial Crisis) சந்திக்குமாம். வங்கிகள், பங்குச் சந்தைகள், ஏன், நாம் பயன்படுத்தும் காகிதப் பணம் (Currency) வரைக்கும், மொத்த பாரம்பரிய நிதி அமைப்பும் (Traditional Financial Systems) ஆட்டம் கண்டு, ஒரு பெரிய சிக்கல்ல மாட்டிக்குமாம்.
நிதி நெருக்கடிக்கும், தங்கத்துக்கும் என்ன சம்மந்தம்?
நீங்களே யோசிச்சுப் பாருங்க. பேங்க்ல வச்சிருக்கிற பணத்துக்கு மதிப்பு இல்லை, ஷேர் மார்க்கெட்ல போட்ட காசு காணாமப் போகுதுன்னா, மக்கள் எதை நம்புவாங்க? எக்காலத்திலயும் மதிப்பு குறையாத ஒரே விஷயம்... தங்கம்! எல்லா நாட்டோட கரன்சியும் விழுந்தாலும், தங்கத்தோட மதிப்பு மட்டும் ஏறும். அதனால, பாபா வாங்கா சொல்ற மாதிரி ஒரு பெரிய நிதிச் சிக்கல் வந்தா, உலகத்துல இருக்குற எல்லா முதலீட்டாளர்களும், மக்களும் தன்னோட பணத்தைப் பாதுகாக்க ஒரே இடத்துக்குத்தான் ஓடுவாங்க... அது தங்கத்தை நோக்கித்தான்.
அப்போ விலை எவ்வளவுதான் ஏறும்?
வரலாற்றுல, இதுக்கு முன்னாடி இந்த மாதிரி பெரிய பொருளாதாரச் சரிவுகள் வந்தப்போ எல்லாம், தங்கத்தோட விலை 20%-ல இருந்து 50% வரைக்கும் கிடுகிடுனு உயர்ந்திருக்கு. பாபா வாங்காவின் தீர்க்கதரிசனத்தை வெச்சுப் பார்த்தா, 2026-ல் தங்கத்தோட விலை குறைந்தபட்சம் 25%-ல இருந்து 40% வரைக்கும் உயர வாய்ப்பிருக்கு.
இப்போ இருக்கிற விலையில இருந்து இவ்வளவு உயர்ந்தா, நம்ம இந்திய மதிப்புக்கு என்ன ஆகும்னு கணக்குப் போட்டா தலை சுத்துது. 2026-ல், 10 கிராம் 24 கேரட் தங்கத்தோட விலை, ஒரு லட்சத்து அறுபத்தி ரெண்டாயிரம் ரூபாயில் (₹1,62,000) இருந்து, ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய் (₹1,80,000) வரைக்கும் போகலாமாம்!
பாபா வாங்கா சொன்ன கணிப்புகள், பங்குச் சந்தை வீழ்ச்சி, கரன்சிகளின் மதிப்புச் சரிவுன்னு பல பூதாகரமான விஷயங்களைச் சுட்டிக் காட்டுது. இது எல்லாமே தங்கத்தின் விலையை உச்சிக்குக் கொண்டு போற விஷயங்கள். இது நடக்குமா, நடக்காதான்னு நம்மால உறுதியா சொல்ல முடியாது.
ஆனாலும், அவர் சொன்ன பல விஷயங்கள் நடந்திருக்குறதால, இந்த 2026 கணிப்பு உலக முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பெரிய பரபரப்பைக் கிளப்பியிருக்கு. எது எப்படியோ, பாவம், ஒரு கிராம் தங்கம் வாங்கணும்ங்கிற நடுத்தர மக்களோட கனவு என்ன ஆகப்போகுதோ.