முதலை வாயில் குழந்தையின் சடலம்!

முதலை வாயில் குழந்தையின் சடலம்!

சமீப காலமாக அமெரிக்காவில் பல குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பலரும் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தி வரும் நிலையில், நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சம்பவம் ஒன்று அங்கே அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தால் கொலை சம்பவங்கள் அங்கே அதிகரித்து வருகிறது. எனவே இதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருந்தாலும் துப்பாக்கி நிறுவனங்களின் ஆதிக்கம் அங்கே அதிகமாக இருப்பதால், எவ்வித சட்ட சிக்கல்களும் வராமல் அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். இதனால் தொடர் கொலை சம்பவங்கள் அங்கு நடந்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் உடலில் பல்வேறு இடங்களில் கத்திக்குத்துகளும், கடுமையான காயங்களும் இருந்தன . இந்த சம்பவத்தில் அவரது கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில், அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளதும் தெரிய வந்தது. ஆனால் அந்த குழந்தை எங்கே இருக்கிறது என்பதே தெரியாத நிலையில், அதைத் தேடும் பணியில் போலீசார் இறங்கினர். பல நாள் தேடுதலுக்குப் பிறகு இரண்டு வயதான அந்த சிறுவனின் உடல் முதலை ஒன்றின் வாயில் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். முதலில் அவர்கள் காண்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை. வேறு ஏதோ பொருளை முதலை வாயில் கவ்வி வைத்துள்ளது என்றே அதிகாரிகள் நினைத்தார்கள்.

ஆனால் நெருங்கி சென்று பார்த்தபோது தான், அது குழந்தை என்பது தெரியவந்தது. முதலை வாயிலிருந்து குழந்தையின் சடலத்தை மீட்கும் முயற்சி கடினமாக இருந்ததால், இறுதியில் அந்த முதலையைக் கொன்றுதான் சடலத்தை மீட்க முடிந்தது. குழந்தை முதலையிடம் சிக்கி உயிரிழந்ததா, அல்லது ஏற்கனவே கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதா என போலீசார் இதுவரை கண்டறிய முடியவில்லை. இதனால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மீது கொடூரமான கொலை உட்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தாயும் மகனும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், குழந்தையின் மரணத்திற்கு காரணம் என்ன என்பதையும் மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. இந்நிலையில் அந்தப் பெண்ணின் கணவரான "தாமஸ் மோஸ்லி" என்பவர் தலைமறைவாக இருப்பதால் இவர் தான் இந்தக் கொலையை செய்திருக்கக்கூடும் என போலீசார் யூகிக்கின்றனர்.

கொலை நடந்த சில மணி நேரத்தில் தாமஸ் கையில் காயங்களுடன் மருத்துவமனைக்கு வந்ததாக சிலர் கூறுகின்றனர். இதை அடிப்படையாக வைத்து போலீசார் தாமஸ்-ஐ தேடி வருகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com