ஒகேனக்கல்லில் பரிசலுக்கு தடை!

ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் அருவி

தற்போது கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து, 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்ததால், காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரண்டு நாட்களாக பெய்யும் கன மழையால், ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தமிழக எல்லையான பலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் 9,500 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

பரிசல்
பரிசல்

இதனால் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்வதால், மெயினருவிக்கு செல்லும் நடைபாதை மூடப்பட்டது.

நேற்று காலை முதல், காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல்

சினி பால்ஸ், மெயின் பால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் எல்லா இடங்களிலும் அருவி நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தாலும், பரிசல் பயண தடைகளால் ஏமாற்றமடைந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com