சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்துக்குத் தடை!

சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதத்துக்குத் தடை!

ருடந்தோறும் கார்த்திகையில் மாலை அணிந்து ஒரு மண்டலம் விரதமிருந்து சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து போவது வழக்கம். ஐயப்பன் தரிசனத்துக்கு வருகை தரும் பக்தர்கள் கோயிலில் விற்கப்படும் அரவணப் பிரசாதத்தை வாங்கிச் செல்வது வழக்கம். இந்தப் பிரசாதத்துக்காகப் பயன்படுத்தப்படும் ஏலக்காய்களில் குறைந்தபட்ச அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி (எம்ஆர்எல்) பூச்சிக்கொல்லி மருந்துகள் சேர்க்கப்பட்டு இருந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் சபரிமலை கோயிலில் அரவணப் பிரசாதத்தை விற்பனை செய்யக்கூடாது என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதோடு, இந்த அரவணப் பிரசாதத்தை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விற்பனை செய்யாமல் இருப்பதற்கு உணவு பாதுகாப்பு ஆணையர், சன்னிதானத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் மூலம் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, FSSAI அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் சபரிமலையில் அரவணப் பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் ஏலக்காயில் 14 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து, இந்த ஏலக்காயைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட அரவணா தொகுப்புகளின் விற்பனையை நிறுத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் 6,65,159 அரவணப் பிரசாதம் அடங்கிய டின்கள் அழிக்கபட்டன. இதனால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு 7 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com