
கடந்த பிப்ரவரியில், டாடா-1mg, Flipkart, Apollo, PharmEasy, Amazon மற்றும் Reliance Netmeds உள்ளிட்ட சுமார் இருபது நிறுவனங்களை ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ததற்காக ஷோ காஸ் நோட்டீஸ் வெளியிட்டு அரசாங்கம் இழுத்தடித்தது. குறிப்பிட்ட அந்த ஆனல்லைன் ஃபார்மஸிகலின் கட்டுப்பாடற்ற மருந்து விற்பனை குறித்து அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாடு தழுவிய போராட்டத்தை நடத்தப்போவதாக அகில இந்திய வேதியியலாளர்கள் மற்றும் மருந்து நிபுணர்கள் அமைப்பான (AIOCD) எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், மத்திய அரசு ஷோ காஸ் நோட்டீஸ் வெளியிட்டும் கூட அந்த ஆன்லைன் பார்மஸிகள் மத்திய அரசுக்கு தங்களது பதிலை சமர்பிக்காமல் தங்களது விறபனையைத் தொடந்து கொண்டு தான் இருக்கின்றன.
இதையடுத்து, இந்தியாவில் உள்ள சுமார் 12.40 லட்சம் வேதியியலாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சக்தி வாய்ந்த அமைப்பான அகில இந்திய வேதியியலாளர்கள் மற்றும் மருந்து நிபுணர்கள் அமைப்பானது (AIOCD) அந்நிறுவனங்களின் விதி மீறிய செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சரவை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது, அவற்றின் விதிமுறைகளை மீறிய ஆபத்தான செயல்பாடுகள் தொடர்ந்து மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்றும் அத்தகைய ஆன்லைன் மருந்தகங்களைத் தடை செய்ய வேண்டும் என்றும் AIOCD வலியுறுத்தியுள்ளது.
மத்திய அரசு, 2018 ஆம் ஆண்டின் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி, உரிமம் இல்லாமல் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதித்து, மறு உத்தரவு வரும் வரை அத்தகைய விற்பனை தடைசெய்யப்பட்டுள்ளது என்று உத்தரவிட்டது, ஆனாலும் நீதிமன்ற உத்தரவுகளை மீறி சட்டவிரோதமாக இயங்கும் இது போன்ற ஆன்லைன் ஃபார்மஸிகள் 4.5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் இலாகாவை மையப்படுத்தி இந்த சட்டத்திற்கு புறம்பான இ-மருந்தகங்களுக்கு DCGI மூலம் ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பிய போதிலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று AIOCD தெரிவித்துள்ளது.
AIOCD தலைவர் ஜே எஸ் ஷிண்டே மற்றும் கௌரவ பொதுச் செயலாளர் ராஜீவ் சிங்கால் ஆகியோர் கையெழுத்திட்ட கடிதத்தில், “1940 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1945 ஆம் ஆண்டு இயற்றப்பட் ஆன்லைன் மருந்தகங்களுக்கான அழகுசாதன விதிகள் உள்ளிட்டவை சுட்டிக்காட்டியபடி ஆன்லைன் ஃபார்மஸிகள் இயங்க வேண்டிய
முறைகள் குறித்து 2020 ஆம் ஆண்டில் கூட்டு மருந்துக் கட்டுப்பாட்டாளரால் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தையும் அவர்கள் கவனத்துக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
தற்போது இந்த ஆன்லைன் மருந்து விற்பனை விவகாரமானது அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது," என்றும் அந்தக் கடிதம் கூறியது, CDSCO இன் இந்த சமர்ப்பிப்பு ஆன்லைனில் மருந்து விற்பனைக்கு உரிமம் இல்லை என்பதை தெளிவாகக் குறிக்கிறது. எனவே, மாண்புமிகு டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி, ஆன்லைன் மருந்து விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதே அதன் ஒரே கோரிக்கை.
இருப்பினும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் CDSCO சமர்ப்பித்த ஆன்லைன்-ஃபார்மஸிகள் குறித்த சமீபத்திய நிலை அறிக்கையானது , 1940 மற்றும் 1945ஆம் ஆண்டுகளில் வெளியான மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்ட விதிகளில் மருந்துகளுக்கான ஷிப்பிங், அஞ்சல் அல்லது டோர் டெலிவரி, அவற்றில் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் விதிகள் எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
“இந்த சமர்ப்பிப்பு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முந்தைய பிரமாணப் பத்திரத்திற்கு முரணானது மற்றும் நமது குடிமக்களின் நல்வாழ்வு குறித்த கவலைகளை எழுப்புகிறது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம், மக்களாகிய நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட் இந்த அரசாங்கம் மற்றும் மூத்த அதிகாரிகள் அவர்கள் நாட்டின் சட்டங்களை நிலைநிறுத்துவார்கள் மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பார்கள் என்று நம்புகிறோம், ”என்று அவர்கள் தங்களது கடிதத்தில் கூறியுள்ளனர்.
"நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தவும், ஆன்லைன் ஃபார்மஸிகளின் சட்டவிரோத செயல்பாடுகளை நிறுத்தவும் அமைச்சரின் தலையீடு மற்றும் அவசர நடவடிக்கையை நாங்கள் தயைகூர்ந்து கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர்கள் அமைச்சரவை செயலாளருக்கு வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளனர்.