ராகுல், சித்தராமையா, சிவகுமாருக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!

ராகுல், சித்தராமையா, சிவகுமாருக்கு பெங்களூரு நீதிமன்றம் சம்மன்!

மீபத்தில் நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலின்போது பாரதிய ஜனதா கட்சியின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு பெங்களூரு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.

சென்ற மே மாதம் 9ம் தேதி பாஜக மாநிலச் செயலாளர் கேசவபிரசாத் தாக்கல் செய்த புகாரில், “சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ‘40 சதவீத ஊழல்’ குற்றச்சாட்டுகளை முன்வைத்தது ஆனால், இதில் எந்த முகாந்திரமும் இல்லை என அவர் தெரிவித்திருந்தார். கடந்த மே மாதம் 5ம் தேதி செய்தித்தாள்களில் வெளியான காங்கிரஸ் விளம்பரத்தில், அப்போதைய பாஜக அரசாங்கம் 40 சதவீத ஊழலில் ஈடுபட்டதாகவும், முந்தைய நான்கு ஆண்டுகளில் 1.5 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்திருப்பதாகவும் கூறப்பட்டதில் எந்த உண்மையும் இல்லை’’ என அவர் தனது புகாரில் கூறி இருந்தார்.

இந்த வழக்கினை எம்.பி. / எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 499 (அவதூறு) மற்றும் 500 (அவதூறுக்கான தண்டனை) ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு ஜூலை 27ம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது நீதிமன்றம்.

ஏற்கெனவே அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது கர்நாடகாவில் மீண்டும் அவதூறு வழக்கு தொடரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com