ஆகஸ்ட்டில் மட்டும் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை: வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க...!

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் 15 நாட்கள் செயல்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
RBI
RBI
Published on

இந்தியாவில் பணப் பரிவர்த்தனை உட்பட பல்வேறு வகையான சேவைகளை வழங்குவதில் வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பயனர்களுக்கு வங்கிகளில் ஏதாவது வேலைகள் இருந்தால் அவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்வது நல்லது. ஏனென்றால் இந்த மாதத்தில் (ஆகஸ்ட்) மொத்தம் 15 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்ச் வங்கி பொதுவாக மாதந்தோறும் வங்கிகளின் விடுமுறை பட்டிலை வெளியிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்பது பற்றிய தகவல்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்காட்டியின்படி, இந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு 15 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
'3 வகையான வங்கிக் கணக்குகள் மூடப்படும்' - ரிசர்வ் வங்கி அறிவிப்பு!
RBI

இருப்பினும் இந்த விடுமுறை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்றும் அனைத்து வங்கிகளும் 15 நாட்களும் மூடப்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் கவலைப்பட வேண்டாம். எனவே உங்கள் பகுதியில் உள்ள வங்கிகளின் விடுமுறை நாட்களை பொறுத்து உங்கள் செயல்பாடுகளை திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த முழு பட்டியல்...

* வழக்கமாக ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும், மாதத்தின் இரண்டாவது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் வங்கிகள் செயல்படாது என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் இந்த மாதம் ஆகஸ்ட் 9 மற்றும் ஆகஸ்ட் 23ம்தேதிகளில் வரும் சனிக்கிழமைகளில் வங்கிகள் விடுமுறை நாட்களாகும்.

* ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை தினங்கள் என்பதால் ஆகஸ்ட் 3, 10, 17, 24 மற்றும் 31-ம்தேதிகளில் வங்கிகள் செயல்படாது.

* ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிகிழமை சிக்கிமில் டென்டோங் லோ ரம் ஃபாத் பண்டிகை அனுசரிக்கப்படுவதால் அன்றைய தினம் சிக்கிம் மாநிலத்திற்கு மட்டும் விடுமுறை கொடுக்கப்படுகிறது.

* ஆகஸ்ட் 12 செவ்வாய்கிழமை அன்று மற்றும் ஜூலானா பூர்ணிமாவை முன்னிட்டு ராஜஸ்தான், உத்தரகாண்ட், உ.பி., டெல்லி உள்ளிட்ட சில வட மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

* ஆகஸ்ட் 13-ம்தேதி புதன்கிழமையன்று தேசபக்தர் தினத்திற்காக இம்பால் (மணிப்பூர்) மாநிலத்தில் உள்ள வங்கிகள் மட்டும் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

* நாடு முழுவதும் ஆகஸ்ட் 15-ம்தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு முற்றுப்புள்ளி: பொதுத்துறை வங்கிகள் முடிவு!
RBI

* ஆகஸ்ட் 16-ம்தேதி சனிக்கிழமை அன்று ஜன்மாஷ்டமி மற்றும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு குஜராத், மிசோரம், மத்தியப் பிரதேசம், சண்டிகர், தமிழ்நாடு, உத்தரகாண்ட், சிக்கிம், தெலுங்கானா, ராஜஸ்தான், கான்பூர் மற்றும் லக்னோவில் உள்ள வங்கிகள் (சத்தீஸ்கர்), மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர், மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள வங்கிகள் செயல்படாது.

* ஆகஸ்ட் 19-ம்தேதி செவ்வாய் கிழமை அன்று மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் பிறந்தநாள் அனுஷ்டிக்கப்படுவதால் திரிபுரா மாநிலத்தில் வங்கிகளுக்கு விடுமுறை.

* ஆகஸ்ட் 25-ம்தேதி திங்கட்கிழமை அன்று அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஆகஸ்ட் 27-ம்தேதி புதன்கிழமை விநாயக சதுர்த்தியை முன்னிட்டு அன்றைய தினம் நாடுமுழுவதும் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஆகஸ்ட் 28-ம்தேதி வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி மற்றும் நுவாகாய் பண்டிகையின் இரண்டாவது நாளை முன்னிட்டு புவனேஷ்வர் (ஒடிசா) மற்றும் பனாஜி (கோவா) ஆகிய இடங்களில் உள்ள வங்கிகள் மட்டும் செயல்படாது.

வங்கி விடுமுறை என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. 15 நாட்கள் விடுமுறை என்பது தமிழகத்திற்கு மட்டும் அது பொருந்தும் என்று கணக்கில் எடுத்துக்கொள்ளக்கூடாது. தமிழகத்தை பொறுத்தவரை ஆகஸ்ட் 3, 9, 10, 15, 16, 17, 23, 24, 28, 31 ஆகிய 10 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பாடாது என்பதால் உங்களுக்கு வங்கிகளுக்கு செல்ல வேண்டிய வேலை இருந்தால் இந்த விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி திட்டமிட்டு கொள்வது நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com