மரம் வளர்க்க வங்கிக் கடன் - வாங்க ரெடியா?

மரம் வளர்க்க வங்கிக் கடன் - வாங்க ரெடியா?

உங்களிடம் உள்ள விவசாய நிலத்தில் மரம் வளர்க்க திட்டமா? மரக்கன்றுகள் தருவதற்கு தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை தயாராக இருக்கிறது. நிறைய இடங்களில் மரக்கன்றுகள் வைக்கவேண்டும் என்று திட்டமிருந்தால் வங்கிகளில் மரம் வளர்ப்பதற்காகவே கடன் தருமாறு தமிழ்நாடு அரசு வங்கிகளை கேட்டுக்கோண்டிருக்கிறது.

தமிழகத்தில் தற்போதுள்ள, 23.7 சதவீதம் மட்டுமே உள்ள பசுமை பகுதிகளை 33 சதவீதமாக உயர்த்தும் லட்சியத்தோடு கடந்த ஆண்டு பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப் பட்டுள்ளது.

முதல் கட்டமாக சென்ற வாரம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் 117 ஏக்கரில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நடப்பாண்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடுவது ஒரு இயக்கமாகவே நடத்தப்படும் என்று பசுமை தமிழ்நாடு இயக்கம் தெரிவிக்கிறது.

சென்ற ஆண்டு இதே நாளில் தமிழக பட்ஜெட்டில் அறிவித்தபடி பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்குவதற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டது. இயக்கத்தின் கீழ் 2 ஆண்டுகளில் 1.77 கோடிமரக்கன்றுகளை உருவாக்க ரூ.38.80 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய வனக் கொள்கையின்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதம் பசுமைப் பகுதி இருக்கவேண்டும். பத்து சதவீதம் புதிதாக காடுகளை உருவாக்க வேண்டுமென்றால் அரசு மட்டுமல்ல சாமானியர்களும் களமிறங்கியாக வேண்டும். இப்போது ஆரம்பித்தால் அடுத்து பத்தாண்டுகளில் எட்டிவிடலாம்.

தமிழ்நாடு அரசு ஏகப்பட்ட மரக்கன்றுகளை இலவசமாக தருவதோடு, விளைச்சல் நிலத்திற்கு அருகிலேயே நீண்ட கால நோக்கில் நிறைய மரங்களை வளர்க்க ஆலோசனை தருகிறது. குறிப்பாக செம்மரங்கள்.

20 ஆண்டுகளுக்குப் பின்னரும் செம்மரங்கள் விலைமதிப்புள்ளதாக இருக்கும். மரங்களை வெட்டி விற்பனை செய்வதிலும் ஏகப்பட்ட சிக்கல் என்பதால் பத்திரமாக இருக்கும். ஆகவே செம்மரங்களை வளர்ப்பதுதான் லாபகரமானது என்கிறார்கள். அதற்காக வங்கிகளும் கடன் தர தயாராக இருக்கிறார்கள்.

மரம் வளர்ப்பதற்கு வங்கிக் கடன் வாங்கிவிடலாம். தேர்தல் நேரத்தில் தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறார், ஒரு அப்பாவி விவசாயி!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com