பல ஆயிரம் கோடி ரூபாய்க்குக் கணக்குக் காட்டாத வங்கி: வருமான வரித்துறை அதிர்ச்சித் தகவல்!

பல ஆயிரம் கோடி ரூபாய்க்குக் கணக்குக் காட்டாத வங்கி: வருமான வரித்துறை அதிர்ச்சித் தகவல்!
Published on

தூத்துக்குடியை தலைமை அலுவலகமாகக் கொண்டு இயங்கி வருகிறது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி. இந்த வங்கி அலுவலகத்தில் கடந்த 27ம் தேதி காலை முதல் இரவு வரை பத்துக்கும் மேற்பட்ட சென்னை புலனாய்வு மற்றும் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயக்குநரக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்.

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் நடத்தப்பட்ட இந்த சோதனையின் முடிவில், அதுகுறித்து விளக்கம் அளித்திருக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள், ‘தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி 4,110 கோடி ரூபாய் அளவுக்கு முறையாகக் கணக்கு காட்டவில்லை’ என்ற அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும், ‘தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 500 கோடி ரூபாய் பரிவர்த்தனைக்கான எந்த விவரங்களும் கணக்கில் காட்டப்படவில்லை, கிரெடிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் 110 கோடி ரூபாய்க்கான பரிவர்த்தனை குறித்து வங்கி நிர்வாகம் எந்தத் தகவல் தரவில்லை’ என வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து இருக்கின்றனர். இவை தவிர, ‘பத்தாயிரம் வங்கிக் கணக்குகளில் 2,700 கோடி ரூபாய் பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை வங்கி தரப்பில் தரப்படவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறது. இப்படி நிதி பரிவர்த்தனை அறிக்கையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முறையாகக் கணக்குக் காட்டாதது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இந்த முறைகேடு, அந்த வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com