
கார் வாங்க வேண்டும் என்பது பலருடைய கனவாக இருக்கும். இதுவும் நடுத்தர குடும்பத்தை சேர்த்தவர்களுக்கு கார் வாங்க வேண்டும் என்பது லட்சியமாகவே இருக்கும். புதுக்கார் வாங்க முடியாதவர்கள் பழைய காரை வாங்கி பயன்படுத்தி தங்களது கார் கனவு நிறைவேற்றிக்கொள்வார்கள். அந்த வகையில் ரூ.12 லட்சம் மதிப்புடைய காரை வெறும் ரூ.3 லட்சத்திற்கே வாங்க முடியும். அது எப்படினு கேட்குறீங்களா.
வருடந்தோறும் நிறையபேர் புதிய கார் வாங்க லோன் எடுப்பார்கள். ஆனால் சில சமயங்களில் அவர்களால் அந்த கார் லோனை சரியான முறையில் திரும்ப செலுத்தமுடிவதில்லை. அப்படி கார் லோன் வாங்கியவர்கள் பணத்தை திரும்ப செலுத்தாத போது வங்கி என்ன செய்யும் என்றால், வங்கி அந்த காரை பறிமுதல் செய்யும். வங்கிகள் இவ்வாறு பறிமுதல் கார்களை தங்களிடமே வைத்திருப்பதில் விருப்பம் இல்லை. மேலும் இதனால் வங்கிக்கு எந்த நன்மையும் கிடைக்காது.
வங்கிகளின் முக்கிய நோக்கம் என்னவென்றும் கார்களுக்கு பெற்ற கடனை மீண்டும் திரும்ப பெற வேண்டும் என்பது தான்.
எனவே வங்கிகள் என்ன செய்யும் என்றால் பறிமுதல் செய்த கார்களை ஏலத்திற்கு விடுவார்கள். இவ்வாறு ஏலம் விடும்போது சில சமயம் 50 சதவீதம், சில சமயங்களில் 80 சதவீதம் தள்ளுபடியில் கூட இந்த கார்களை நீங்கள் ஏலத்தில் வாங்க முடியும். இதில் உள்ள முக்கிய பிரச்சனை என்னவென்றால் இது குறித்து பொதுமக்களுக்கு சரியாக தெரிவதில்லை. அதாவது இப்படி ஒரு ஏலம் நடக்கிறது என்பதே பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. ஏன்னா பெரும்பாலும் இந்த ஏலம் பற்றி தகவல்கள் ‘ராண்டம் செய்தித்தாள்’ (Random Newspaper), ராண்டம் வெப்சைட்டில் மட்டுமே வெளிவரும்.
ஆனால் இதை பார்ப்பதற்கு அதிகாரப்பூர்வ இணைதளம் ஒன்று உள்ளது. eauctionsindia.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று login செய்து உள்ளே சென்று propertyயில் all cataegoryல் கார் அல்லது உங்களுக்கு தேவையான வாகனத்தை தேர்வு செய்து உள்ளே சென்று வங்கி (Bank) மற்றும் Auctions by cityஐ தேர்வு செய்தால் வாகனங்கள் ஏலம் தொடர்பான முழு விவரங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
அனைத்து விவரங்களையும் சரிபார்த்த பின்னர் நேரடியாகவே சம்பந்தப்பட்ட வங்கிக்கே போன் செய்து உங்களுக்கு தேவையான வாகனங்கள் பற்றிய விவரங்களை பெற்றுக்கொள்ளலாம். இடைத்தரகர் (agents)இல்லாமல் நீங்களே நேரடியாக பேச முடியும். இதனால் பெருமளவிலான தள்ளுபடி விலையில் பறிமுதல் செய்யப்பட்ட காரை (seized cars at massive discounts) நீங்கள் வாங்க முடியும்.
அதாவது, இதன் மூலம் எளியமுறையில் இடைத்தரகர்கள் இல்லாமல் 100 சதவீதம் சட்டபூர்வமான முறையில் குறைந்த விலையில் ரூ.12 லட்சம் மதிப்புடைய காரை வெறும் ரூ.3 லட்சத்திற்கு வாங்க முடியும்.