"பல்"வீர் சிங்கிற்கு ஆதரவாக பேனர்கள்!

 "பல்"வீர் சிங்கிற்கு ஆதரவாக பேனர்கள்!
Published on

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது குற்றவழக்குகளில் காவல் நிலையங்களில் விசாரணைக்கு வருபவர்களின் பற்களை பிடுங்கியதாக புகார்கள் எழுந்தது.

இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், புகார் குறித்து மாநில மனித உரிமை ஆணையமும், சேரன்கமகாதேவி உதவி ஆட்சியரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்த பல்வீர் சிங்கிற்கு ஆதரவாக பேனர்கள் வைத்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தினை கிளப்பியுள்ளது. அம்பாசமுத்திரம் பகுதியில் பல்வீர் சிங் பணியில் சேர்ந்த பிறகு குற்றச் சம்பவங்கள் குறைந்திருப்பதாக பொதுமக்கள் வீடியோ வெளியிட்டும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அவரால் பற்கள் பிடுங்கப் பட்டவர்கள் விசாரணை ஆணையங்களில் ஆஜராகி, அவருக்கு எதிராகப் புகார்கள் தெரிவித்து வருகிறார்கள். மேலும், பாதிக்கப்பட்ட சிலரை காவல்துறையினர் புகாரளிக்கக் கூடாது என மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்திருக்கிறது. அத்துடன், பற்கள் பிடுங்கப்பட்ட சிலரை போலீஸார், தானாகப் பல்விழுந்து விட்டதாகச் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டுவதாகவும் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சர்ச்சைக்குரிய ஏ.எஸ்.பி பல்வீர் சிங் நல்லவர் என்றும் அவர் அம்பாசமுத்திரம் பகுதியில் பணியில் சேர்ந்த பிறகு குற்றச்சம்பவங்கள் குறைந்திருப்பதாகவும் மக்கள் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய அப்பகுதி மக்கள், ‘கோவில் கொடை விழாவிற்கு வந்து பாதுகாப்பு அளித்தார் என்றும் எங்கள் பகுதியில் சி.சி.டி.வி கேமராக்கள் வைக்க நடவடிக்கை மேற்கொண்டார். அவர் பொதுமக்களிடம் எளிமையாக பேசினார். இதனால் ஊர் மக்கள் அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்ததாக தெரிவி்த்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com