இந்திய அணிக்கு ரூ. 131 கோடி பரிசு மழை!

T20 Finals
T20 Finals
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து, பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் 19 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 159 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

இதன் மூலம் 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் அணியாக இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்து மோதின. இதில் 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதற்காக பல்வேறு தரப்பினரும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இந்தியா உலகக் கோப்பையை தொடர்ச்சியாக இரண்டு முறை வென்றது. டி20 வடிவத்தில் எந்த அணியும் தொடர்ந்து இதை செய்தது இல்லை. இதுவே முதல் முறை. கோப்பையை வெல்ல முற்றிலும் தகுதியான மற்றும் சரியானவர்கள் என்று கூறியுள்ளார். அதேபோல் முன்னாள் கேப்டன் விராட் கோலியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு நடிகரும் அரசியல் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் போன்ற பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா அணியின் சிறப்பான ஆட்டம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. சஞ்சு சாம்சன் முதல் ஜஸ்பிரித் பும்ரா வரை பல வீரர்கள் ஆடி அசத்தினர். வெற்றிக்குப் பிறகு ஐசிசி சிறந்த பிளேயிங் லெவன் பட்டியலை அறிவித்தது. அதில் இந்திய அணியின் நான்கு வீரர்கள் இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 131 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.வீரர்கள் பயிற்சியாளர்கள் என அனைவருக்கும் இந்த பரிசு தொகை பகிர்ந்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசி 27 கோடி ரூபாய் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com