சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி

பிசிசிஐ தலைவர் பதவி: மேற்கு வங்கத்தில் வலுக்கும் அரசியல் சர்ச்சை!

Published on

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவர் பதவி மீண்டும் சவுரவ் கங்குலிக்கு அளிக்கப்படாதது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே அரசியல் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பிசிசிஐ-யின் தலைவராக உள்ள சவுரவ் கங்குலியின் பதவிக் காலம் முடிவடைவதால், அப்பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரான பெங்களூரைச் சேர்ந்த 67 வயதான ரோஜர் பின்னி போட்டியின்றி அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

 இதுபற்றி திரிணமூல் காங்கிரஸின் மாநிலங்களவை எம்.பி சாந்தனு சென் தன் டிவிட்டரில் பதிவிட்டதாவது;

சவுரவ் கங்குலிக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப் படாதது அரசியல் பழிவாங்கல் நோக்கம் காரணம்! அவர் பிஜேபி-யில் இணையாததால்தான் இப்படி நேர்ந்துள்ளது. அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா-வுக்கு வழங்கப்பட்ட இரண்டாவது வாய்ப்பு, கங்குலிக்கு ஏன் வழங்கப்படவில்லை?

 -இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் அம்மாநில பிஜேபி இடையே சூடுபிடித்துள்ளது.

 திரிணமூல் காங்கிரஸின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறியுள்ளார் பாஜகவின் தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ்.

அவர் திரிணாமூலுக்கு பதிலடியாக ‘’கிரிக்கெட் உட்பட எல்லா விஷயங்களையும் அரசியலாக்குவதை திரிணமூல் காங்கிரஸ் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும்’’  என்று தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com