இதுல கூடவா கலப்படம் செய்வாங்க? - மக்களே உஷார்!

இதுல கூடவா கலப்படம் செய்வாங்க? - மக்களே உஷார்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் அழுகிய இஞ்சி பூண்டு பேஸ்டில் ரசாயனம் கலந்து தயாரித்த தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். 

தற்போது வரும் பெரும்பாலான அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களில் எது கலப்படமானது எது கலப்படமாற்றது என்பதையே நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு அதில் பல வகையான ரசாயனங்களைப் பயன்படுத்தி கெட்டுப்போனதையும் தூய்மையாக இருப்பதுபோல் காட்டி விடுகிறார்கள். உணவுப் பொருட்களில் கலப்படம் என்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். இருப்பினும், சிலர் தங்களின் சுயலாபத்திற்காக இந்த படுபாதக செயலை தொடர்ந்து செய்கின்றனர். 

தெலுங்கானா, நங்காரெட்டி மாவட்டத்திலுள்ள கடேதாரே தொழிற்பேட்டையில் தனிப்படை போலீசார் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது இஞ்சி பூண்டு பேஸ்ட் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருக்கும் சூழலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சுகாதாரமற்ற கழிவு நீரைப் பயன்படுத்தி ஆபத்தான ரசாயனங்கள் மூலம் அழுகிய இஞ்சி பூண்டைப் பயன்படுத்தி பேஸ்ட் தயாரிக்கப் படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். 

உடனடியாக இஞ்சி பேஸ்ட் தயாரிப்பு பணிகளை தடுத்து நிறுத்திய போலீசார், தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். மேலும் தொழிற்சாலையில் மேலாளர்கள் இதுவரைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். உடல் நலத்தை சீர்குலைத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், கலப்படம் செய்யப்பட்ட இஞ்சி பூண்டு பேஸ்ட்டை, கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் அடைத்து சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. 

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் அனுமதியின்றி கடந்த சில ஆண்டுகளாகவே இந்த மோசடி நடத்தப்பட்டு வருவதை போலீசார் உறுதி செய்தனர். ஆதாரமற்ற முறையில் மொத்தம் 500 கிலோ இஞ்சி பூண்டு விழுது, 200 லிட்டர் அசிட்டிக் அமிலம், 550 கிலோ அசைவ மசாலா பாக்கெட்டுகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விதிமுறைகளை மீறி மாம்பழக் குளிர்பானம் தயாரிப்பதையும் போலீசார் கண்டறிந்தனர். பின்னர் கலப்பட இஞ்சி பேஸ்ட் தயாரிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தொழிற்சாலை மேலாளர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். 

சுகாதாரமற்ற முறையில் கலப்பட இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் மாம்பழ குளிர்பான தயாரிப்பில் ஈடுபட்ட தொழிற்சாலைக்கு சீல் வைக்கப்பட்டு மேலாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com