காருக்குள் ஊடுருவி 69 சோடா புட்டிகளை கபளீகரம் செய்த கரடி!

காருக்குள் ஊடுருவி 69 சோடா புட்டிகளை கபளீகரம் செய்த கரடி!
Published on

கனடாவின் கொலம்பியாவில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண், தனது வீட்டில் உள்ள நாய் விடாமல் குரைப்பதைக் கண்டு விழித்துக் கொண்டார். நாய் ஏன் இப்படி தொடர்ந்து குரைக்கிறது என்பதற்கான காரணத்தை அறிய அந்த பெண்மணி வீட்டின் உள்ளிருந்து கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து பார்த்தபோது அவரே எதிர்பாராத, சம்பவம் நடந்திருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்.

வெளியே வந்து பார்த்தபோது அவரின் கார் கதவு திறந்திருந்தது. யார் கதவைத் திறந்திருப்பார்கள் என்று நினைத்தவாறே காருக்கு அருகில் வந்தபோது கதவை திறந்தது மனிதர்கள் அல்ல, ஒரு கரடி என்று தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தார். காரினுள் அந்த கரடி, ஏதாவது சாப்பிடுவதற்கு இருக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தது.

இது தொடர்பான செய்தி கனடா ஒலிபரப்பு கார்ப்பொரேஷன் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதிகாலை 3 மணி அளவில் நாய் குறைக்கும் சத்தத்தை கேட்டு தூங்கிக் கொண்டிருந்த ஷாரோன் ரஸ்ஸல் என்ற பெண்மணி விழித்துக் கொண்டார். வீட்டிற்கு வெளியே வந்தபோது கார் கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது. உள்ள எட்டிப் பார்த்தபோது கருப்பு நிற கரடி ஒன்று உள்ளே அமர்ந்துகொண்டு புட்டியில் அடைக்கப்பட்டிருந்த

சோடாவை சுவைத்துக் கொண்டிருந்த்து. இப்படி 69 புட்டி சோடாக்களை அந்த கரடி காலி செய்திருந்தது. அந்த காரில் மொத்தம் 72 சோடா புட்டிகள் ஒரு கிரேட் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 69 புட்டி சோடாக்களைத்தான் கரடி வயிறு முட்ட குடித்திருந்த்து. எஞ்சியிருந்தது 3 புட்டிகள் மட்டுமே.

“அடுத்த நாள் காலை காரில் வேலைக்குச் செல்ல வேண்டுமே என்ற கவலை எனக்கு. எனவே நான் உடனே பால்கனியிலிருந்து குளிர்ந்த நீரை ஊற்றி அந்த கரடியை விரட்டி அடிக்க முயன்றேன். ஆனால், அந்த கரடி எதற்கும் அசையவில்லை”.

“நான் அந்த கரடியை வேட்டையாடுவதுபோல் பாவனை செய்தேன். ஆனால், அதற்கும் அந்த கரடி அசைந்து கொடுக்கவில்லை. கடைசியில் அந்த கரடி சோடாவை குடித்து முடித்து மறுநாள் காலை அந்த இடத்தைவிட்டு செல்லும் வரை காத்திருந்தேன்” என்றார் ஷாரோன் ரஸ்ஸல். காரினுள் அந்த கருப்பு கரடி செய்த அட்டகாசத்தையும், குடித்துவிட்டு வெளியில் தூக்கி எறிந்த காலி சோடா புட்டிகளையும் படம்பிடித்து வெளியிட்டுள்ளார் ரஸ்ஸல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com