இனி ஒசூரிலிருந்து இருபதே நிமிடத்தில் பெங்களூரா?

இனி ஒசூரிலிருந்து இருபதே நிமிடத்தில் பெங்களூரா?
Aditi Tailang

தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருவிற்கு செல்லும் மக்களின் முக்கிய தலைவலியே ட்ராபிக் தான். ஓசூர் வழியாக சாலையில் சென்றால் 3 முதல் 5 மணி நேரம் வரை இன்ச் இன்ச்சாக போனால் தான் பெங்களூருவை அடையமுடியும். இனி இது குறித்த கவலைகள் வேண்டாம். இனி ஒசூரிலிருந்து இருபதே நிமிடத்தில் பெங்களூரை அடையலாம் என்கிறார்கள் A BLADE India என்ற நிறுவனம். இவர்கள் ஒசூரிலிருந்து பெங்களூருக்கு தங்களது ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளார்கள். இனி சாலையில் 3 மணிநேரம் பயணிக்க வேண்டிய தூரத்தை இந்த ஹெலிகாப்டர் சேவையின் மூலம், 20 நிமிடங்களுக்குள் சென்றடையலாம் என்கிறார்கள் இந்நிறுவனத்தார்.

A BLADE India என்ற நிறுவனம் தான் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. இந்த இன்ட்ரா-சிட்டி ஹெலிகாப்டர் சேவை IT மையமான ஓசூரில் இருந்து பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் வரும் பயணிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலை விமானங்கள் 8:45 AM முதல் 10:30 AM வரை இயங்கும். விமான நிலையத்திற்கு திரும்பும் பயணம் மாலை 3:45 முதல் 5 PM வரை இருக்கும். இந்த ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஒரு நபருக்கு 6000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பெங்களுருவில், முதல் கட்டமாக தற்போது காலையில் பெங்களூரு விமான நிலையத்திலிருந்து, தெற்கு நோக்கி ஓசூர் நகரத்திற்கும் மாலையில் ஓசூரில் இருந்து விமான நிலையத்திற்கும் சேவைகள் தொடங்கப்படுகிறது. சாலையில் 3 மணிநேரம் பயணிக்க வேண்டிய தூரத்தை இந்த ஹெலிகாப்டர் சேவையின் மூலம், 20 நிமிடங்களுக்குள் சென்றடையலாம்.

BLADE India, AIRBUS மற்றும் Eve Air Mobility போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, மிகவும் நெரிசலான அல்லது அணுக முடியாத தரைவழிப் பாதைகளுக்குச் குறைந்த செலவிலான விமானப் போக்குவரத்து மாற்றுகளை உருவாக்கி வருகிறது.

2019 நவம்பரில் BLADE India மகாராஷ்டிரா- மும்பை, புனே மற்றும் ஷீரடி இடையே முதல் ஹெலிகாப்டர் சேவைகளை தொடங்கியது. பின்னர், ஹெலிகாப்டர் விமானங்களை கர்நாடகா மாநிலத்தில் கூர்க், ஹம்பி மற்றும் கபினி மற்றும் கோவாவிற்கு விரிவுபடுத்தியது. பின்னர் தற்போது பெங்களூருவிற்கு வந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com