பெண்கள் பாதுகாப்புக்கு சாலையில் SOS.. பெங்களூருவில் அசத்தல் திட்டம்!

பெண்கள் பாதுகாப்புக்கு சாலையில் SOS.. பெங்களூருவில் அசத்தல் திட்டம்!
Editor 1
Published on

பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்பிற்காக சாலையில், ஆங்காங்கே எஸ் ஓ எஸ் என்ற டெலிஃபோன் பூத் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது குறைவாகதான் இருக்கிறது. இன்றளவும் பெண்கள் இரவு நேரங்களில் தனியாக நடமாடுவது என்பது சற்று கடினம் தான். இந்த மாதிரியான சூழ்நிலைகளை தவிர்ப்பதற்காகவும், பெண்களின் பாதுகாப்பிற்காகவும் பெங்களூருவில் சூப்பரான திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நிர்பயா நிதி திட்டத்தின் கீழ் பெங்களூரு நகரில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ் ஓ எஸ் என்ற டெலிஃபோன் பூத் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பெங்களூருவில் உள்ள வணிக வளாகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குடிசைபகுதிகள் போன்ற முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

Editor 1

இதுபோன்ற இடங்களில் பெண்கள் தனியாக பயணிக்கும்போதோ அல்லது பாதுகாப்பாற்ற நிலையில் இருப்பதாக உணர்ந்தாலோ எஸ் ஓ எஸ் என்ற டெலிஃபோன் பூத் இயந்திரத்தில் உள்ள சிகப்பு நிறத்தில் உள்ள பட்டனை மட்டும் க்ளிக் செய்தால் போதும். உடனடியாக அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்படும். அதன்பின்னர் அழைப்பு வந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை கண்காணிப்பதற்காக இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் போலீசாரால் கண்காணிக்கப்படும். இதனால், காவல் உதவி மையத்தில் உள்ள போலீசார் உடனடியாக தகவல் வந்த இடத்திற்கு விரைந்து ஆபத்தில் உள்ள பெண்களை காப்பற்ற முடியும் என கர்நாடக போலீசார் தெரிவித்துள்ளனர். பெங்களூரிவில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் பலரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com