ராஜமௌலிக்கு சிறந்த இயக்குநர் விருது!

ராஜமௌலிக்கு சிறந்த இயக்குநர் விருது!
Published on

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘நியூயார்க் திரைப்பட விமர்சகர்கள் வட்டம்’ என்ற அமைப்பு இயங்கி வருகிறது.

சிறந்த இயக்குநருக்கான நியூயார்க் ஃபிலிம் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருது, 'ஆர்.ஆர்.ஆர். ' படத்திற்காக இயக்குநர் ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது. அவருடன் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், அர்னோஃப்ஸ்கை, சாரா போலி, ஜினா பிரின்ஸ் பிளைத்வுட் போன்ற பிரபல இயக்குநர்கள் போட்டியிட்ட நிலையில், இந்த விருது ராஜமௌலிக்கு கிடைத்துள்ளது.

இந்த அமைப்பு இந்த ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருதை ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்காக, இயக்குநர் ராஜமவுலிக்கு அறிவித்துள்ளது. இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு ‘ஆர்ஆர்ஆர்’ தேர்வாகவில்லை என்றாலும், இந்தப் படம் பொதுப் பிரிவில் நேரடியாக ஆஸ்கர் விருதில் கலந்து கொள்கிறது. அதற்கான புரமோஷன்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில் ராஜமவுலிக்கான இந்த விருது, ஆஸ்கர் தேர்வுக் குழுவின் கவனத்தை ஈர்க்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் போட்டியிட இந்த வருடம் இந்தியா சார்பில் இயக்குநர் ராஜமௌலியின் 'RRR', 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்', 'ராக்கெட்ரி' போன்ற படங்கள் தேர்வாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ஹாலிவுட்டின் முன்னணி இயக்குநர்கள் பலர் 'RRR' படத்தை சிலாகித்துப் பேசிய நிலையில், நிச்சயம் இந்தியா சார்பாக அந்தப் படமே ஆஸ்கர் விருதுப் போட்டிக்குச் செல்லும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தன. இந்த நிலையில் குஜராத்தித் திரைப்படமான 'Chhello Show' (The Last Film Show) இந்தியா சார்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com