சிறந்த கல்வி நிறுவனம் பட்டியல்: தொடர்ந்து 2வது முறையாக முதலிடம் பெற்ற ஐஐடி மெட்ராஸ்!

சிறந்த கல்வி நிறுவனம் பட்டியல்: தொடர்ந்து 2வது முறையாக முதலிடம் பெற்ற ஐஐடி மெட்ராஸ்!

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் சிறந்த கல்வி நிறுவனங்கள் குறித்த, 2023ம் ஆண்டுக்கான தேசிய நிறுவன தரவரிசை பட்டியலில் பொறியியல் பிரிவில் சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து 2வது முறையாக இந்த ஆண்டும் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்கள் குறித்த தேசிய நிறுவன தரவரிசை பட்டியலில் வெளியிடப்படுகிறது. அதன்படி 2023ம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். தேசிய நிறுவன தரவரிசை பட்டியல் எனப்படும் (National Institutional Ranking Framework) சார்பாக ஒவ்வொரு ஆண்டும், பல்கலைக்கழகங்கள், கடிலக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருந்தகம், மேலாண்மை, சட்டம் மற்றும் கட்டிடக்கலை திட்டங்களின் ஒட்டுமொத்த கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. அதன்படி பொறியியல் கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னையில் உள்ள ஐஐடி மெட்ராஸ் தொடர்ந்து 2வது முறையாக முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டும் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பொறியியல் தரவரிசை பட்டியலில் ஐஐடி மெட்ராஸ்க்கு அடுத்தப்படியாக ஐஐடி டெல்லி, ஐஐடி பாம்பாய், ஐஐடி கான்பூர் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதேபோல் திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப மையமான National Institute of Technology (NIT) 9வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு), ஜாமியா மில்லியா இஸ்லாமியா (ஜேஎம்ஐ) மற்றும் ஐஐஎஸ்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் 16வது இடத்திலும் கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகம் 24வது இடத்திலும் இடம்பெற்றுள்ளது. மேலும், சிறந்த 100 பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளது.

அதேபோல், சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் சென்னையில் உள்ள பாரம்பரிய கல்லூpரயான சென்னை பிரசிடென்சி ல்லூpரி தேசிய அளவில் 3வது இடத்திலும், லயோலா கல்லூpரி 4வது இடத்திலும், கோவையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூpரி 6வது இடத்திலும் உள்ளது. முதல் 100 இடங்களுக்கான கல்லூpரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 கல்லூpரிகளில் இடம்பெற்றுள்ளது. தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் அடுத்தடுத்து தேசிய தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பது மாநிலத்தின் கல்வி கட்டமைப்பின் சிறப்பை எடுத்துரைக்கும் வகையில் அமைத்துள்ளது கவனிக்கத்தக்கது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com