திசு மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது!

திசு மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகத்துக்கு சிறந்த மாநில விருது!
Published on

ந்திய அளவில் தமிழ்நாடு மாநிலம் மருத்துவத் துறையில் கடந்த சில காலமாக பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. அந்த வகையில், உறுப்பு தானத்திலும் உடலுறுப்பு அறுவை சிகிச்சை மற்றும் அதற்கான விழிப்புணர்வு போன்றவற்றில் இந்தியவின் மற்ற மாநிலங்களை விட தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது.

இந்த நிலையில், ‘நோட்டோ’ (NOTTO) என்று கூறப்படும் தேசிய உடலுறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சை அமைப்பின் 13வது இந்திய உறுப்பு தானத்துக்கான தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் இன்று, இந்தியா முழுவதும் உறுப்பு தானத்துக்கான சிகிச்சைகள், அதற்கான விழிப்புணர்வுகள் போன்ற பல்வேறு விஷயங்களில் சிறந்து விளங்கும் தனி நபர்கள், அமைப்புகள், மாநிலங்கள் மற்றும் பலதரப்பட்டவர்களுக்கும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய அளவில் உறுப்பு தான திட்டத்தில் சிறந்த செயல்பாட்டுக்கான சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு நோட்டோ அமைப்பின் சார்பில் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை தமிழக மக்கள் நலன் மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 292 கொடையாளர்கள் உறுப்பு தானம் செய்துள்ளனர். அவர்களின் அந்த உறுப்பு தானத்தின் பயன்பாடு 1,162 ஆக உள்ளது. அப்படிப் பார்க்கையில், தமிழகத்தில் இன்று உறுப்பு தானம் என்பது ஓர் இயக்கமாகவே மாறியுள்ளது" என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com