ஜாக்கிரதை: H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் இந்தியாவில் நிகழ்ந்த பலி!

ஜாக்கிரதை: H3N2 இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் இந்தியாவில் நிகழ்ந்த பலி!

H3N2 வைரஸால் ஏற்பட்ட முதல் இரண்டு இறப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது: ஒன்று கர்நாடகாவிலிருந்து மற்றொன்று ஹரியானாவிலிருந்து.

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த 82 வயதான எரேகவுடா ஃபிப்ரவரி 24 அன்று ஹாசன் மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எரேகவுடா ஆறு நாட்களுக்குப் பிறகு காலமானார் என்று மாவட்ட சுகாதார அலுவலர் (ஹாசன்) தெரிவித்தார். அவர் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார் மற்றும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற கூட்டு நோய்களின் அறிகுறிகளுடன் இருந்தார்.

நோய்த்தொற்று ஏற்படக் காரணமான அனைத்து பாஸிட்டிவ் மூலங்களையும் அடையாளம் காணப்படுவதை உறுதி செய்வதற்காக, இறந்த கர்நாடக மனிதரின் அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தொடர்புகளையும் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். இருப்பினும், இதுவரை அவரது மனைவி உட்பட அனைவருக்கும் நடத்தப்பட்ட வைரஸ் தொற்று பரிசோதனைகள் நெகட்டிவ் ஆகவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதனால் அடுத்த 14 நாட்களுக்கு அப்பகுதியில் கண்காணிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர் இந்த வார தொடக்கத்தில் மாநில தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் (டிஏசி) ஒரு கூட்டத்தை நடத்தினார் , அத்துடன் தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பின்பற்ற வேண்டிய தேவையான முன்னெச்சரிக்கைகள் குறித்து வழிகாட்டுதல்களையும் அவர் வெளியிட்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில் 2-5 நாட்களுக்குள் இந்த தொற்று குணமாகிவிடும் என்கிறார் அமைச்சர் சுதாகர். “முன்னர் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள், H3N2 நோயால் பாதிக்கப்பட்ட பிறகு மிகவும் தீவிரமான இருமல் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும் நோய்த்தொற்று அதிகம் காணப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்." என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் கூடுதலாக தூய்மை, கூட்ட நெரிசலைத் தடுத்தல், கை சுகாதாரம் போன்ற நடவடிக்கைகள் மூலம் இந்த தொற்றுநோய் பரவுவதைச் சமாளிக்க முடியும் என்று கூறினார் அமைச்சர்.

இதற்கிடையில், மார்ச் 8 அன்று, கான்பூரில் உள்ள ஹாலெட் மருத்துவமனையில் ஒரு நாளில் கிட்டத்தட்ட 50 நோயாளிகள் அதிக காய்ச்சல், தொடர் இருமல் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டனர். ஹாலெட் மருத்துவமனையின் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் ரிச்சா கிரி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், "இந்த வைரஸை கோவிட்-19 இலிருந்து வேறுபடுத்துவது கடினம், இது இன்ஃப்ளூயன்ஸா ஏ இன் துணை வகை என்பதால் சோதனைக்குப் பிறகுதான் இது சாத்தியமாகும். அதைச் சோதிப்பது கடினம். ஏனெனில் ஒவ்வொரு துணை வகைக்கும் ஒரு தனி கிட் உள்ளது." என்று கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com