Farmers
Farmers

விவசாயிகளுக்கான பாதுகாவலர் விருது - தமிழக அரசு அறிவிப்பு!

Published on

தமிழகத்தில் பாரம்பரியமாக பயிரிடப்பட்டு வரும் பல வகை பயிர்கள் இப்போது காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பல விவசாயிகளுக்கு அதற்கான விதை நாற்று போன்றவை கிடைக்காமல் போவதுதான். குறிப்பாக அரிசி வகைகளில் பல நம் உடலுக்கு ஊக்கம் கொடுக்கக் கூடியவையாகும். ஆனால் அது போன்ற அரிசி ரகங்களை தேடினாலும் கிடைக்காத சூழ்நிலை இப்பொழுது உள்ளது.

இதை கருத்தில் கொண்ட தமிழக அரசு, பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து பாதுகாத்து வரும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக பயிர் விளைச்சல் போட்டியை குறிப்பிட்ட சில மாவட்டங்களில் நடத்தி வருகிறது. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டமும் ஒன்றாகும். திருப்பத்தூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் இந்த போட்டியில் கலந்து கொள்ள விவசாயிகளை அழைத்துள்ளது.

2024-25-ம் ஆண்டில் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து பாதுகாத்து வரும் விவசாயிகளுக்கு, பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பாரம்பரிய ரகங்கள் பாதுகாவலர் விருது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் போட்டியில் கலந்து கொள்ள உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிகள் 2 ஏக்கர் பரப்பில் இயற்கை முறையில் பாரம்பரிய நெல் சாகுபடி செய்ய வேண்டும்.

மேற்பார்வை குழு முன்னிலையில் அறுவடைவிண்ணப்ப நுழைவு கட்டணம் ரூ.150 செலுத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மாநில அளவிலான போட்டி என்பதால், மேற்பார்வை குழு முன்னிலையில் அறுவடை செய்யவேண்டும். எனவே அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் அறுவடை தேதியை தெரிவிக்க வேண்டும். போட்டிக்கான நிபந்தனைகளுக்குட்பட்டு சாகுபடி செய்து மாநில அளவில் அதிக மகசூல் பெரும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும்.

இதையும் படியுங்கள்:
செல்ஃபி எடுத்த வடகொரியா ஒலிம்பிக் வீரர்களை கண்காணிக்க உத்தரவிட்ட அதிபர் கிம் ஜாங் உன்!
Farmers

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது என்னவென்றால்... விவசாயிகள் மட்டும் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டால் போதுமானது அல்ல; மக்களும் அதைத் தேடிச் சென்று வாங்கி பயன்பெற வேண்டும். இது போன்ற பாரம்பரிய அரிசி ரகங்கள் தொடக்கத்தில் சற்று விலை அதிகமாக தான் காணப்படும். பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, விளைச்சலும் அதிகரிக்கும். அப்போது தானாக நியாயமான விலைக்கு பாரம்பரிய அரிசி ரகங்கள் வரும். இதனால் மக்களும் தங்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு நம் நாட்டிலேயே விளைச்சலாகும் இது போன்ற அரிசி ரகங்களை வாங்க முற்படும்போது விவசாயிகளுக்கு ஊக்கமூட்டுவதாக அமையும்.                    

logo
Kalki Online
kalkionline.com