கர்பூரி தாகுருக்கு “பாரத ரத்னா”: தந்திரமாக நிதிஷ்குமாரை வீழ்த்திய பா.ஜ.க!

 Karpoori Thakur
Karpoori Thakur

பிகார் முன்னாள் முதல்வரும் சோஷலிஸ்ட் தலைவருமான கர்பூரி தாகுருக்கு பிந்தைய “பாரத ரதனா” விருதை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது மாநில அரசியலில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. இதை வரவேற்றுள்ளது. முதல்வர் நிதிஷ்குமார் இது ஒரு நல்ல முடிவு என பாராட்டுத் தெரிவித்துள்ளார். ஆனால், ராஷ்ட்ரீய ஜனதாதளம் இது ஒரு அரசியல் நாடகம் என்று வர்ணித்துள்ளது.

பிகாரில் கூட்டணியை அடிக்கடி மாற்றி அரசியல் செய்து வருபவர் ஐக்கிய ஜனதாதளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார். இப்போது பா.ஜ.க. எடுத்துள்ள சமூக கலாசார முயற்சிகளை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறார். ராமர் ஆலய கும்பாபிஷேகத்தின் பின்னணியில், ஒரு உத்தியாக எடுக்கப்பட்ட முடிவுதான் தாகுருக்கு பாரத ரத்னா விருது கெளரவம். ஒருபக்கம் வரலாற்று எதிரியான லாலுவையும் மற்றொருபுறம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரம் வழங்குவதை வலியுறுத்தி வந்தவர் என்பதை கருத்தில் கொண்டால் நிதிஷ் இப்போது சவாலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

நிதிஷ்குமாரின் எதிர்பார்த்தபடியே கர்பூரி தாகுருக்கு பாரத ரத்னா விருது வழங்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிகார் அரசியலில் சமூக நீதிக்கான அவரது நிலைப்பாடு, ஓபிசியில் உட்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கம், லாலு மீதான எதிர்ப்பு ஆகியவை இப்போது பா.ஜ.க.வின் தந்திர நடவடிக்கைகளால் குறுக்கிடுகின்றன.

மங்கலான சாதிக் கோடுகள் மற்றும் அயோத்தி இயக்கத்தின் பின்விளைவுகள் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் செயல்பாட்டில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானைப்போல நிதிஷ்குமார் பிகாரில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளை உணர்ந்தவர். எனினும் வரும் மக்களவைத் தேர்தலில் அவர், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் சிராக் பாஸ்வான், அவரது வெற்றியை தடுக்கலாம்.

மேலும் எதிர்காலங்களில் தேர்தல் நடக்கும்போது பேரம் பேசும் சக்தியையும் பாதிக்கலாம். பாரத ரத்னா விருது, நிதிஷின் அரசியல் கணக்குக்கு வலுசேர்க்கிறது. ஆனால், அவர் பிகார் அரசியல் சிக்கல்களிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறார், கட்சியை எப்படி வழிநடத்திச் செல்லப் போகிறார்  என்பது தெரியவில்லை.

அரசியலுக்கு அப்பாற்பட்டு சமூக நீதிக்காக போராடியவர் மக்கள் நாயகன் என்று அழைக்கப்பட்ட கர்பூரி தாகுர். ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர். சமூக அநீதியை எதிர்த்து போராடியவருக்கு மறைவுக்குப் பின் பாரத ரத்னா அறிவிக்கப்பட்டுள்ளது சரியான முடிவுதான்.

1924 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதி பிறந்த கர்பூரி தாகுர், 1988 ஆம் ஆண்டு பிப்ரவரி 17  இல் மறைந்தார். இந்திய அரசியலில் அவர் ஏற்படுத்திய தாக்கம் மறக்க முடியாதது. சமூக நீதிக்காக அவர் கடைசிவரை போராடிவந்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com