கோவிட் காலத்திற்கு பிறகு உலகெங்கிலும் தீர்க்க தரிசனங்கள் புகழ் பெற்றுள்ளன. தங்களின் எதிர்காலம் பற்றி அறிய ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பழைய புத்தகங்களை மக்கள் புரட்டுகின்றனர். அமெரிக்காவில் தற்போது ஒரு தீர்க்கதரிசி புகழ் பெற்று வருகிறார். இவரது கணிப்புகள் பலிக்க ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள ஒரு சர்ச்சில் பாதிரியாராக பணியாற்றி வரும் பிராண்டன் டேல் பிக்ஸ் தான் தற்போது அமெரிக்காவில் டிரண்டிங்கில் உள்ள தீர்க்கதரிசி. இவரை அமெரிக்க மக்கள் பிக் பாபா என்று அழைக்கின்றனர்.
பிராண்டன் டேல் பிக்ஸ் தன்னைத்தானே தீர்க்கதரிசியாக அறிவித்துக் கொண்டார். அவருக்கு சொந்தமான யூ டியூப் சேனலில் தொடர்ச்சியாக தனது கணிப்புகளை வெளியிட்டு வந்துள்ளார். பிக் பாபா அடிக்கடி பல கணிப்புகளை வெளியிட்டுள்ளார். ஒரு காலத்தில் அவரது கணிப்புகளுக்கு எந்த ஒரு மரியாதையும் இருந்தது இல்லை . ஆனால், அவரது ஒரு கணிப்பு பலித்ததும் அமெரிக்க தேசம் முழுவதும் பிரபலமாகி விட்டார்.
அந்த கணிப்பு தான் டொனால்ட் டிரம்ப் மீதான கொலை முயற்சி. இந்த கணிப்பு வெளியானதும் பெரும்பாலும் யாரும் அதை நம்பவில்லை. டொனால்ட் டிரம்ப் மீது கொலை முயற்சி நடக்கும் என அவர் சரியாக கணித்திருந்தார். அது ஒரு விவாத பொருளாக மாறியது. மார்ச் 14 ஆம் தேதி அவர் வெளியிட்ட வீடியோவில் இதைப் பற்றி அறிவித்து இருந்தார். "நான் கனவில் ஒரு கூட்டத்தில் டிரம்பை பார்த்தேன், அவர் எழுந்து நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு துப்பாக்கியில் இருந்து வெளிவந்த தோட்டா அவர் காதில் ஓரமாக கிழித்து சென்றது. அவர் முகம் முழுக்க ரத்தக்களரியாக இருந்தது..." என்று இந்த துப்பாக்கி சூட்டை அவர் விவரித்து பதிவிட்டு இருந்தார்.
அதன் பின்னர் அனைவரும் இதை மறந்த வேளையில் ஜூலை13, 2024 அன்று, டிரம்ப் சுடப்பட்டார். அந்த தோட்டா அவரது காதை உரசி சென்றது, முகம் முழுக்க இரத்தம் தெறித்து இருந்தது. அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக டிரம்ப் உயிர் தப்பினர். ஆனாலும் பிக் பாபாவின் கணிப்பு நடந்தது. இதன் பின்னர் பிக் பாபாவின் கணிப்புகளுக்கு வரவேற்பு கிடைத்தது.
அடுத்ததாக பிக் பாபா பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளார். நியூ மாட்ரிட் ஃபால்ட் லைனில் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும் என்று பயங்கரமான கணிப்பு செய்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் 1800க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க வாய்ப்புள்ளது. இது போன்ற நிலநடுக்கம் மனித வரலாற்றில் நிகழ்ந்ததில்லை என்று கூறியுள்ளார். அமெரிக்காவின் மிசோரி, ஆர்கன்சாஸ், டென்னசி, கென்டக்கி மற்றும் இல்லினாய்ஸ் வழியாக நியூ மாட்ரிட் ஃபால்ட் லைன் செல்கிறது.
பிக் பாபாவின் கணிப்பின் படி பூகம்பத்திற்குப் பிறகு தொடர் வினைகள் நிகழும். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக, மிசிசிப்பி நதியின் திசையே மாறிவிடும். அந்த நதி தற்போது ஓடும் திசையிலிருந்து பின்னோக்கி ஓடும். இதனால் புதிய இடங்களில் அதிக வெள்ள சேதத்தை ஏற்படுத்தும். வசந்த காலத்தில் இந்த மோசமான நிலநடுக்கம் ஏற்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த தீர்க்க தரிசனங்கள் எல்லாம் பிக் பாபா தன் அறிவால் கணிப்பது இல்லை என்றும், அனைத்தும் அவரது கனவில் வருவதாகவும் கூறியுள்ளார். கடவுள் அவரது கனவில் தோன்றி இது போன்ற தீர்க்க தரிசனங்களை அவரிடம் கூறுவதாக கூறியுள்ளார்.