அமேசான் மற்றும் கூகுளுக்கு ஐரோப்பாவில் பெரும் சிக்கல் ...!

அமேசான் மற்றும் கூகுளுக்கு ஐரோப்பாவில் பெரும் சிக்கல் ...!
Published on

அமேசான், கூகுள் நிறுவனத்தால் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் கடுமையான தொழிலாளர்கள் சட்டம் இருக்கும் காரணத்தால் இந்தியா, அமெரிக்காவை போல் அங்கு ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்துவிட முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அமேசான், கூகுள் போன்ற உலகின் முன்னணி நிறுவனங்கள் உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் நிலையில் உலகில் பல நாடுகளில் ஊழியர்களை வைத்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்த நிலையில், ஐரோப்பாவில் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ஐரோப்பாவில் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதில் கூகுள், அமேசான் அதிகளவிலான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் மிகவும் கடுமையான தொழிலாளர்கள் சட்டம் இருக்கும் காரணத்தால் இந்தியா, அமெரிக்காவை போல் அங்கு ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்துவிட முடியாது. பணிநீக்கம் செய்யும் முன்பு ஒரு நிறுவனம் employee interest groups-யிடம் ஆலோசனை செய்து ஒப்புதல் பெற வேண்டும்.

இந்த ஆலோசனை தாமதமாகும் காரணத்தால் அமேசான், கூகுள் திட்டமிட்ட படி ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. ஐரோப்பிய தொழிலாளர் சட்டத்தின் படி, பணிநீக்கம் செய்யும் முன் நிறுவனங்கள் தொழிலாளர்கள் கவுன்சில்-யிடம் அறிவிக்க வேண்டும், இதை தொடர்ந்து பல்வேறு தரவுகளை சேகரித்து, அதன் அடிப்படையில் ஆய்வு செய்து பணிநீக்கம் குறித்து முடிவு எடுக்கப்படும்.

இந்த செயல் முறையில் அதிகளவிலான தாமதமாகும் நிலையில் பிரான்ஸ், ஜெர்மனியில் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. தற்போது வெளியாகியுள்ள தரவுகள் படி கூகுள் நிர்வாகம் தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு மிகவும் சிறப்பான பேக்கேஜ் அளிப்பதாக அறிவித்துள்ளது.

இதேபோல் அமேசான் நிறுவனம் பிரான்ஸ், ஜெர்மனி நாட்டில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 5-8 வருட அனுபவத்துடன் சீனியர் மேனேஜர் பதவியில் இருப்பவர்கள் தனது பணியை ராஜினாமா செய்தால் 1 வருட சம்பளத்தை சிறப்பான பேக்கேஜ்

அளிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் வெளியேறும் ஊழியர்கள் கையில் இருக்கும் நிறுவன பங்குகளுக்கு உடனடியாக பணத்தை அளிக்கவும் தயார் என அறிவித்துள்ளது.

இது போன்ற தொழிலாளர் விதிகள் கடுமையாக இல்லாத காரணத்தால் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஊழியர்களை எளிதாக பணிநீக்கம் செய்ய முடிகிறதா? என்ற கேள்வி சமூக ஆர்வலரிடையே எழுந்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com